ஹானர் Honor Magic 5, 5 Pro சீரிஸை ஸ்பெயினின் பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) 2023 இன் முதல் நாளில் அறிமுகப்படுத்தியது. Shenzhen-ஐ தளமாகக் கொண்ட நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் வரிசையில் Honor Magic 5 மற்றும் Honor Magic 5 ஆகியவை அடங்கும். இது தவிர, நிறுவனம் மடிக்கக்கூடிய முதன்மையான ஹானர் மேஜிக் Vs ஐ அறிமுகப்படுத்தியது. ஹானர் மேஜிக் 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் Qualcomm Snapdragon 8 Gen 2 பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
ஹானர் மேஜிக் Vs மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சியான் மற்றும் பிளாக் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1599 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 865 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை குறித்து இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
இதில் 7.9 இன்ச் FHD+ 90Hz OLED மடிக்கக்கூடிய உள்புற ஸ்கிரீன், வெளிப்புறம் 6.45 இன்ச் FHD+ 120Hz AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது.
இதில் உள்ள டைமிக் டிம்மிங், சர்கடியன் நைட் டிஸ்ப்ளே புளூ லைட் பாதிப்புகளை சிறப்பாக எதிர்கொள்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் இரண்டு ஸ்கிரீன்களிலும் 1920Hz PWM டிம்மிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்கிரீன் ஃப்ளிக்கர் ஆவதை குறைக்கிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு சார்ந்த மேஜிக்ஒஎஸ் 7.1 வழங்கப்பட்டு இருக்கிறது.