Honor Magic 6 Lite ஸ்மார்ட்போன் 108MP கேமராவுடன் அறிமுகம்

Updated on 06-Dec-2023

Honor Magic 6 Lite அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் Qualcomm Snapdragon 6 Gen 1 SoC பொருத்தப்பட்டுள்ளது. இந்த போனில் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 5300mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் Honor X9b அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்த ஸ்மார்ட்போன் இத்தாலியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், புதிய மேஜிக் 6 லைட் வரும் நாட்களில் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹானர் மேஜிக் 6 லைட்டின் விலை மற்றும் சிறப்பம்சம் தகவல் பற்றி பார்க்கலாம்.

Honor Magic 6 Lite விலை மற்றும் விற்பனை தகவல்.

Honor Magic 6 Lite மிட்நைட் பிளாக், எமரால்டு கிரீன் மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு ஆகிய மூன்று கலர் விருப்பங்களில் கிடைக்கிறது. தற்போது ஸ்மார்ட்போனின் விலை தெரியவில்லை. இருப்பினும், நிறுவனம் வெப்சைட்டின் பதிவு செய்யும் போது 50 யூரோக்கள் கூப்பனை வழங்குகிறது. ஸ்மார்ட்போன் டிசம்பர் 27, 2023 முதல் கிடைக்கும்.

Magic 6 Lite சிறப்பம்சம்.

Honor Magic 6 Lite யில் 6.78 இன்ச் கொண்ட AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது, இதன் ரேசளுசன் 2652 x 1200 பிக்சல்கள், ஸ்கிரீன் டு பாடி ரேசியோ 92.8%, பிக்சல் டென்சிட்டி 429, ரெப்ராஸ் ரேட் 120Hz மற்றும் 1200 நிட்கள் வரை ஹை ப்ரைட்னாஸ் இருக்கிறது, இந்த ஸ்மார்ட்போனில் Qualcomm Snapdragon 6 Gen 1 SoC பொருத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:BSNL ஒரு வருடம் வேலிடிட்டி கொண்ட சூப்பர் பிளான் தினமும் கிடைக்கும் 2GB டேட்டா

இந்த ஃபோன் 8 ஜிபி ரேம் உடன் 256 ஜிபி ஸ்டோரேஜை கொண்டுள்ளது. ஹானர் மேஜிக் 6 லைட் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MagicOS 7.2 யில் வேலை செய்கிறது. டைமென்சன் பற்றி பேசுகையில், போனில் நீளம் 163.6 mm அகலம் 75.5 mm திக்னஸ் 7.98 mm மற்றும் எடை 185 கிராம். ஆகும்

கேமரா பற்றி பேசுகையில் Honor Magic 6 Lite யின் பின்புறம் 108MP ப்ரைமரி கேமரா, 5MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி விருப்பங்களில் Wi-Fi, 5G ஆதரவு, புளூடூத் 5.1, NFC, USB டைப் C போர்ட், GPS, GLONASS, Beidou மற்றும் Galileo ஆகியவை அடங்கும். இந்த போனில் ஆன் ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஃபோனில் 5300mAh பேட்டரி உள்ளது, இது 35W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :