Honor Magic 5 Ultimate Edition: 16GB ரேம் மற்றும் 5,450mAh பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்ட புதிய Honor போன்.

Honor Magic 5 Ultimate Edition: 16GB ரேம் மற்றும் 5,450mAh பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்ட புதிய Honor போன்.
HIGHLIGHTS

Honor Magic 5 Ultimate Edition ஸ்மார்ட்போன் சீனாவில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

மொபைல் இரண்டு கலர்களிலும், ஒரு ஸ்டோரேஜ் விருப்பத்திலும் வருகிறது.

octa-core Snapdragon 8 Gen 2 SoC ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது.

Honor Magic 5 Ultimate Edition ஸ்மார்ட்போன் சீனாவில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. மொபைல் இரண்டு கலர்களிலும், ஒரு ஸ்டோரேஜ் விருப்பத்திலும் வருகிறது. octa-core Snapdragon 8 Gen 2 SoC ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது. இது 120Hz ரிபெரேஸ் ரெட் மற்றும் கொள்ளளவு மல்டி-டச் சப்போர்டுடன் 6.81-இன்ச் OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. Honor Magic 5 Ultimate Edition ஆனது 66W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சப்போர்டுடன் 5,450mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
 
Honor Magic 5 Ultimate Edition price, availability
Honor Magic 5 Ultimate Edition 16GB ரேம் மற்றும் 512GB உள்ளடங்கிய ஸ்டோரேஜுடன் ஒரே வேரியண்டில் வெளியிடப்பட்டது, இதன் விலை சீனாவில் CNY 6,699 (கிட்டத்தட்ட ரூ. 79,200) ஆகும். இது கருப்பு மற்றும் ஆரஞ்சு கலர் விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹானர் சீனாவின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் இந்த ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு கிடைக்கிறது.
 
Honor Magic 5 Ultimate Edition specifications
Honor Magic 5 Ultimate Edition Android 13 அடிப்படையிலான MagicOS 7.1 இல் இயங்குகிறது மற்றும் இரட்டை சிம் கனெக்ட்டிவிட்டி சப்போர்ட் செய்கிறது. இது 6.81-இன்ச் முழு-HD+ (1,312 x 2,848 பிக்சல்கள்) OLED டிஸ்ப்ளே, கொள்ளளவு மல்டி-டச் சப்போர்ட் மற்றும் 120Hz ரிபெரேஸ் ரெட் கொண்டுள்ளது. மொபைல் பொனானது Octa-core Snapdragon 8 Gen 2 SoC மூலம் இயக்கப்படுகிறது, 16GB ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஹானர் மேஜிக் 5 அல்டிமேட் எடிஷன் உள்ள மூன்று பின்புற கேமரா செட்டப் 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவுடன் 50 மெகாபிக்சல் பிரைமரி பின்புற கேமராவை உள்ளடக்கியது. செல்பிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு, மொபையில் 16 மெகாபிக்சல் முன் கேமரா மற்றும் 3D டெப்த் கேமரா உள்ளது.

போனில் 512GB உள்ளடங்கிய ஸ்டோரேஜ் உள்ளது. கனெக்ட்டிவிட்டி விருப்பங்களில் டூயல்-பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.2, USB டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், OTG மற்றும் NFC ஆகியவை அடங்கும். இது 66W சூப்பர் பாஸ்ட் வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. பேட்டரி திறன் 5,450mAh. போன் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

மேலும், இதில் இன்-டிஸ்ப்ளே பிங்கர் சென்சார், முடுக்கமானி, சுற்றுப்புற ஒளி சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், காம்பஸ் மற்றும் கைரோஸ்கோப் ஆகியவை அடங்கும். Honor Magic 5 Ultimate Edition இன் எடிஷன் யின் டைமென்ஷன் 162.9×76.7×8.77mm மற்றும் இதன் எடை 217 கிராம்.

S Raja
Digit.in
Logo
Digit.in
Logo