சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை இந்தியாவுக்குள் என்ட்ரி தயாராக இருக்கும் Honor நிறுவனம் சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவில் என்ட்ரி கொடுக்க உள்ளது. அதன் ரீ-என்ட்ரியுடன், நிறுவனம் தனது Honor 90 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த போன் செப்டம்பர் 14ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஹானர் 90 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் கேமரா வேரியன்ட்களை இங்கே காணலாம். Honor 90 ஸ்மார்ட்போன் உண்மையில் இந்தியாவில் பெரிய அளவில் என்ட்ரி கொடுக்க தயரகிதா இதிலிருக்கும் சிறப்பம்சங்கள் என்ன பார்க்கலாம் வாங்க.
Honor 90 ஸ்மார்ட்போனில் ஒரு 200MP மெயின் கேமரா கொண்டுள்ளது இது தவிர, போனில் 2MP டெப்த் சென்சார் மற்றும் 12MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் மேக்ரோ கேமராவும் இருக்கும்.
Honor 90 ஸ்மார்ட்போனில் 200MP Capricorn மல்டி-ஃபிரேம் ஃப்யூஷன், நோய்ஸ் ரிடக்சன் குறைப்பு அல்காரிதம் மற்றும் பிக்சல் பின்னிங் ஆகியவை உள்ளன. இந்த போன் குறைந்த வெளிச்சத்திலும் அசத்தலான போட்டோ எடுக்க முடியும்.
நிறுவனத்தின் படி பார்த்தால் இந்த போன் மிக சிறந்த 200MP ப்ரைம் கேமரா சிறந்த டைனமிக் ரேஞ்ச் HDR மற்றும் விரிவான போட்டோக்களை எடுக்கும் பவர் கொண்டது. இது தவிர, மிகக் குறைந்த வெளிச்சத்திலும் ஒருவர் பிரைட்டன ஷோர்ட் எடுக்க முடியும். உங்கள் தகவலுக்கு, ப்ரைம் கேமரா 1/1.4-இன்ச் சென்சாருடன் வருகிறது இது முந்தைய ஜெனறேசனை விட 25% பெரிய சென்சார் ஆகும். இந்த புதிய சென்சார் மூலம் சுமார் 11% அதிக லைட் கேப்சர் செய்ய முடியும் இது மட்டுமின்றி, போனில் மேம்படுத்தப்பட்ட போர்ட்ரெய்ட் மோட் உள்ளது, இதன் மூலம் சிறந்த ஷோட்ஸ் எடுக்க முடியும். போனின் முன்பக்கத்தில் 50MP செல்ஃபி கேமராவும் உள்ளது.
https://twitter.com/ExploreHONOR/status/1700031454426608076?ref_src=twsrc%5Etfw
இது மட்டுமில்லாமல் கேமராவில் AI பயன்படுத்தப்பட்டுள்ளது இது வீடியோ ரெக்கார்ட் ஸ்ட்ரீம்லைன் மற்றும் பயனர்களுக்கு உதவுகிறது. தகவலுக்கு, போனில் AI Vlog Assistant கிடைக்கிறது இதன் மூலம், சோசியல் மீடியாக்களில் வெளியிடப்படும் 15 வினாடி வீடியோக்களை சிறந்த முறையில் படமாக்க முடியும்.
இன்னு கீழே Honor 90 யில் எடுத்த கேமராவை சிலவற்றை பார்க்கலாம்.