அறிமுகத்திற்க்கு முன்பே Honor 90 5G கேமராவில் இருக்கும் பல சுவாரஸ்ய தகவல்.

அறிமுகத்திற்க்கு முன்பே Honor 90 5G கேமராவில் இருக்கும் பல சுவாரஸ்ய தகவல்.
HIGHLIGHTS

Honor நிறுவனம் சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவில் என்ட்ரி கொடுக்க உள்ளது

தனது Honor 90 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

Honor 90 ஸ்மார்ட்போனில் ஒரு 200MP மெயின் கேமரா கொண்டுள்ளது

சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை இந்தியாவுக்குள் என்ட்ரி தயாராக  இருக்கும் Honor நிறுவனம் சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவில் என்ட்ரி கொடுக்க உள்ளது. அதன் ரீ-என்ட்ரியுடன், நிறுவனம் தனது Honor 90 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த போன் செப்டம்பர் 14ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஹானர் 90 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் கேமரா வேரியன்ட்களை இங்கே காணலாம். Honor 90 ஸ்மார்ட்போன் உண்மையில் இந்தியாவில் பெரிய அளவில்  என்ட்ரி கொடுக்க தயரகிதா  இதிலிருக்கும்  சிறப்பம்சங்கள் என்ன பார்க்கலாம் வாங்க.

Honor 90 caemra sample

Honor 90 ஸ்மார்ட்போனில் ஒரு 200MP மெயின் கேமரா கொண்டுள்ளது இது தவிர, போனில் 2MP டெப்த் சென்சார் மற்றும் 12MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் மேக்ரோ கேமராவும் இருக்கும்.

Honor 90 ஸ்மார்ட்போனில் 200MP Capricorn மல்டி-ஃபிரேம் ஃப்யூஷன், நோய்ஸ் ரிடக்சன் குறைப்பு அல்காரிதம் மற்றும் பிக்சல் பின்னிங் ஆகியவை உள்ளன. இந்த போன் குறைந்த வெளிச்சத்திலும் அசத்தலான போட்டோ எடுக்க முடியும்.

நிறுவனத்தின் படி பார்த்தால் இந்த போன் மிக சிறந்த 200MP ப்ரைம் கேமரா சிறந்த டைனமிக் ரேஞ்ச் HDR மற்றும் விரிவான போட்டோக்களை எடுக்கும் பவர் கொண்டது. இது தவிர, மிகக் குறைந்த வெளிச்சத்திலும் ஒருவர் பிரைட்டன ஷோர்ட் எடுக்க முடியும். உங்கள் தகவலுக்கு, ப்ரைம் கேமரா 1/1.4-இன்ச் சென்சாருடன் வருகிறது இது முந்தைய ஜெனறேசனை விட 25% பெரிய சென்சார் ஆகும்.  இந்த புதிய சென்சார் மூலம் சுமார் 11% அதிக லைட் கேப்சர் செய்ய முடியும் இது மட்டுமின்றி, போனில் மேம்படுத்தப்பட்ட போர்ட்ரெய்ட் மோட் உள்ளது, இதன் மூலம் சிறந்த ஷோட்ஸ்  எடுக்க முடியும். போனின் முன்பக்கத்தில் 50MP செல்ஃபி கேமராவும் உள்ளது.

இது மட்டுமில்லாமல் கேமராவில் AI பயன்படுத்தப்பட்டுள்ளது  இது வீடியோ ரெக்கார்ட் ஸ்ட்ரீம்லைன் மற்றும் பயனர்களுக்கு உதவுகிறது. தகவலுக்கு, போனில் AI Vlog Assistant கிடைக்கிறது  இதன் மூலம், சோசியல்  மீடியாக்களில் வெளியிடப்படும் 15 வினாடி வீடியோக்களை சிறந்த முறையில் படமாக்க முடியும்.

இன்னு கீழே  Honor 90 யில் எடுத்த கேமராவை  சிலவற்றை  பார்க்கலாம்.

Honor 90 camera

Honor9)

Honor 90

 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo