200MP கேமராவுடன் அறிமுகமானது, Honor 90 யின் முதல் சேலில் கிடைக்கும் பல அற்புதமான ஆபர்கள்

200MP கேமராவுடன்  அறிமுகமானது, Honor 90 யின் முதல் சேலில் கிடைக்கும் பல அற்புதமான ஆபர்கள்
HIGHLIGHTS

Honor இன்று தனது Honor 90 5ஜி ஸ்மார்ட்போனை 200MP அல்ட்ரா க்ளியர் கேமராவுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது

இது மூன்று மெமரி வகைகளில் வாங்குவதற்கு கிடைக்கும்.

இந்தியாவில் ஹானர் 90 விலை ரூ.32,999 முதல் தொடங்குகிறது

Honor இன்று தனது Honor 90 5ஜி ஸ்மார்ட்போனை 200MP அல்ட்ரா க்ளியர் கேமராவுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது நான்கு அழகான நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன் ஆகும். Honorஇந்த 5ஜி போனின் ஆரம்ப விலை இந்தியாவில் ரூ.35000க்குள் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது மூன்று மெமரி வகைகளில் வாங்குவதற்கு கிடைக்கும். இந்த புதிய போனின் அனைத்து முக்கிய அம்சங்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களைப் பார்ப்போம்.

Honor 90 5G Price in India,

இந்தியாவில் ஹானர் 90 விலை ரூ.32,999 முதல் தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை செப்டம்பர் 18 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அமேசானில் தொடங்கும். Honor 90ஐ வாங்குவதற்கு ICICI மற்றும் HDFC பேங்க் கார்ட்களை பயன்படுத்தும்போது, ​​இன்ஸ்டன்ட் தள்ளுபடியாக ரூ.3000 மற்றும் கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.2000 பெறலாம். இந்த ஸ்மார்ட்போனை டயமண்ட் சில்வர், பீகாக் ப்ளூ, மிட்நைட் பிளாக் மற்றும் எமரால்டு கிரீன் ஆகிய வண்ண விருப்பங்களில் வாங்கலாம்.

Honor 90 5G டாப் 5 சிறப்பம்சம்.

Honor 90 5G டிஸ்ப்ளே 

Honor 90 5G ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது 2664 x 1200 பிக்சல்கள் ரேசளுசன் மற்றும் 93.3%ஸ்க்ரீன்  பாடி டு ரேசியோ வழங்குகிறது, 

Honor 90 Display

Honor 90 5G ப்ரோசெசர் 

ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 1 ப்ரோசெசர் வழங்குகிறது  இது Adreno 644 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MagicOS 7.1 யில் இயங்குகிறது. 

Honor 90

Honor 90 5G ஸ்டோரேஜ் 

Honor 90 5G ரேம் ஸ்டோரேஜ்  பற்றி பேசினால், உங்களுக்கு 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜை வழங்குகிறது.

Honor 90 5G கேமரா 

Honor 90 5G போனில் போட்டோக்ரபிக்கு பின்புறம் மூன்று கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, இதில் 200MP அல்ட்ரா க்ளியர் கேமரா, 12MP அல்ட்ரா வைட்/மேக்ரோ கேமரா மற்றும் 2MP டெப்த் கேமரா ஆகியவை அடங்கும். இந்த கேமரா 10x டிஜிட்டல் ஜூம் மற்றும் 4K (3840×2160) வீடியோ ரெக்கார்டிங்கை சப்போர்ட் செய்கிறது, இது தவிர, போனின் முன்பக்கத்தில் 50MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

Honor 90 Camera

Honor 90 5G பேட்டரி 

இப்போது பேட்டரி பற்றி பேசுகையில், இந்த போனில் 5000mAh பேட்டரி உள்ளது, இது 66W ஸ்டாண்டர்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo