Honor 90 சமிபத்தில் இந்தியயவில் செப்டமபர் 14 தேதி அறிமுகம் செய்யப்பட்டது, இந்த போன் முதல் முறையாக இன்று அதாவது செப்டம்பர் 18 ஆம் தேதி மதியம் 12 மணி அமேசானில் முதல் விற்பனைக்கு கிடைக்கும், இந்த விற்பனையின் கீழ் 15000ரூபாய் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது,, இந்த போனில் 200எம்பி கேமரா சென்சார் உள்ளது. மேலும், போன 3840Hz மங்கலான வீதத்தைக் கொண்டுள்ளது. அதாவது போனின் டிஸ்ப்ளே கண்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். இந்த போன் இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களில் வருகிறது, 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது
Honor 90யின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.37 ஆயிரம். அதேசமயம் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.39,999. ஆனால் வெளியீட்டு சலுகையில், நீங்கள் 10,000 ரூபாய் தள்ளுபடி சலுகையுடன் போனை வாங்க முடியும். இந்த நிலையில், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.27,999 ஆக உள்ளது. 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.29,999 ஆக உள்ளது.
இது மட்டுமில்லாமல் போன் வாங்கும் போது ரூ.2000 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்படுகிறது. நீங்கள் ICICI மற்றும் SBI கார்டு மூலம் போனை வாங்கினால், உடனடியாக ரூ.3,000 தள்ளுபடியை பெற முடியும். எக்ஸ்சேஞ்ச் மற்றும் பேங்க் தள்ளுபடியை நீங்கள் பயன்படுத்திக் கொண்டால், மொத்தமாக ரூ.15,000 தள்ளுபடியைப் பெற முடியும். மேலும் இதை தவிர no-cost EMI யில் இதை வாங்கலாம்,
Honor 90 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் கர்வ்ட்OLED டிஸ்ப்ளே உள்ளது. இதன் டிஸ்பிளே ரேசளுசன் 1.5K பிக்சல்கள். டிமிக் ரேட் 3840Hz ஆகும். இந்த போன் Qualcomm 7 Gen 1 சிப்செட் சப்போர்டுடன் வருகிறது. இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MagicOS 7.1 யில் வேலை செய்கிறது,
இந்த போனில் இதன் மெயின் கேமரா 200MP, 13MP அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 2MP டெப்த் சென்சார். போனின் முன்பக்கத்தில் 50MP கேமரா சென்சார் உள்ளது.
இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் Honor 90'யில் Lithium polymer பேட்டரி வழங்குகிறது இது 5000mAh பேட்டரியுடன் 65W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது. மேலும் இந்த போனில் கனெக்டிவிட்டி பற்றி பேசினால் இது 5G, 4G LTE, புளூடூத் 5.2, டூயல்-பேண்ட் Wi-Fi, GPS, NFC மற்றும் பல இருக்கிறது.