Huawai Honor பிரான்டு இந்தியாவில் ஹானர் 8C ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. அந்நிறுவனத்தின் ஹானர் 7C ஸ்மார்ட்போனின் அப்டேட் செய்யப்பட வெர்ஷனாக புதிய 8C அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் HD பிளஸ் 19:9 எஸ்பெக்ட் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, LED . ஃபிளாஷ், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் மற்றும் 8 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டிஃபை அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போனில் 3D நானோ-லெவல் டெக்ஸ்ச்சர் வடிவமைப்பு, பிரத்யேக லைட் மற்றும் ஷேடோ சர்குலேஷன் எஃபெக்ட், பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் 4ஜி வோல்ட்இ, வசதி, பிரத்யேக டூயல் சிம், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்கள் மற்றும் 4000 Mah . பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
Honor 8C சிறப்பம்சங்கள்:
– 6.26 இன்ச் 1520×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 506 GPU
– 4 ஜி.பி. ரேம்
– 32 ஜி.பி. / 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம்
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.2
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, எல்.இ.டி. ஃபிளாஷ்
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4000 Mah பேட்டரி
ஹானர் 8சி ஸ்மார்ட்போன் அரோரா புளு, மிட்நைட் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.11,999 மற்றும் 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹானர் 8C ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் ஹானர் இந்தியா வெப்சைட்களில் டிசம்பர் 10ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.