ஹுவாய் Honor பிரான்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் ஹானர் 7X ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. பட்ஜெட் விலையில் அறிமுகமான Honor 7X விலை இந்தியாவில் குறைக்கப்படுவதாக ஹானர் அறிவித்துள்ளது.
பிளாக், புளு மற்றும் கோல்டு என மூன்று வித நிறங்களில் விற்பனை செய்யப்படும் ஹானர் 7X சமீபத்தில் ரெட் நிறத்தில் வெளியிடப்பட்டது. ஹானர் 7X ஸ்மார்ட்போன் சென்னை அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதுர் தயாரிப்பு ஆலையில் தயாரிக்கப்படுகிறது. இதற்கென Honor ஃப்ளெக்ஸ் நிறுவனத்துடன் இணைந்திருக்கிறது.
paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்
Honor 7X சிறப்பம்சங்கள்:
– 5.93 இன்ச் 2160×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் கிரின் 659 பிராசஸர்
– மாலி T830-MP2 GPU
– 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 7.0 நௌக்கட் சார்ந்த EMUI 5.1
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
– 8 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3340 Mah பேட்டரி
ஹானர் 7X ஸ்மார்ட்போன் 32 ஜிபி மாடல் தற்சமயம் ரூ.11,999 என்றும் 64 ஜிபி மாடல் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் Honor 7X ஸ்மார்ட்போன் அமேசான் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. ஹானர் 7X 64 ஜிபி மெமரி மாடல் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.
paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்