Honor 200 Lite 5G 108MP கேமரா உடன் அதிரடியான பொன் அறிமுகம்

Updated on 20-Sep-2024
HIGHLIGHTS

Honor 200 Lite 5G இன்று செப்டம்பர் 19 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

இது MediaTek டிமன்சிட்டி 6080 சிப்செட்டுடன் வருகிறது

ஹானர் 200 லைட் இந்தியாவில் 8ஜிபி + 256ஜிபி விருப்பத்திற்கு ரூ.17,999க்கு வருகிறது

Honor 200 Lite 5G இன்று செப்டம்பர் 19 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போனில் 108எம்பி டிரிபிள் ரியர் கேமரா யூனிட் மற்றும் 50எம்பி செல்ஃபி ஷூட்டர் பொருத்தப்பட்டுள்ளது. பர்போம்ன்சுக்கு , இது MediaTek டிமன்சிட்டி 6080 சிப்செட்டுடன் வருகிறது. இது தவிர, போனில் 4500mAh பேட்டரி உள்ளது, இது 35W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் பல சக்திவாய்ந்த போன்களுடன் நேருக்கு நேர் போட்டியை அளிக்கிறது. எனவே, இந்த கட்டுரையில் புதிய Honor 200 Lite 5Gயின் முதல் 5 போட்டியாளர்களை பட்டியலிட்டுள்ளோம். ஆனால் அதற்கு முன் அதன் விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்.

Honor 200 Lite 5G யின் விலை மற்றும் விற்பனை

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஹானர் 200 லைட் இந்தியாவில் 8ஜிபி + 256ஜிபி விருப்பத்திற்கு ரூ.17,999க்கு வருகிறது. இது செப்டம்பர் 27 அன்று மதியம் 12 மணி முதல் Amazon, Explore Honor வெப்சைட் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மெயின்லைன் ஸ்டோர்கள் வழியாக நாட்டில் வாங்குவதற்கு கிடைக்கும். ஹானர் 200 லைட் மூன்று வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது – சியான் லேக், மிட்நைட் பிளாக் மற்றும் ஸ்டாரி ப்ளூ. ஆகிய கலரில் கிடைக்கும்

Honor 200 Lite 5G சிறப்பம்சம்.

Honor 200 Lite 5G அம்சங்கள் பற்றி பேசினால் 6.7-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது மேலும் இதன் பீக் ப்ரைட்னாஸ் 2,000 நிட்ஸ் இருக்கிறது TÜV ரைன்லேண்ட் டிக்கெட் ப்ரீ சப்போர்ட் மற்றும் ஒரு ஹை 3,240Hz PWM டிம்மிங் ரேட் தெளிவான விசுவல்க்கு வழங்கப்படுகிறது.

இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், MediaTek Dimensity 6080 சிப்செட் மற்றும் 8GB யின் ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது

இது ஆண்ட்ராய்டு 14 ஐ அடிப்படையாகக் கொண்ட MagicOS 8.0 இல் இயங்குகிறது. இது சில AI அம்சங்களையும் வழங்குகிறது. இதில் MagicLM, Magic Portal, Magic Capsule, Magic Lock Screen மற்றும் Parallel Spaces ஆகியவை அடங்கும்.

இதன் காமெராவை பற்றி பேசினால் Honor 200 Lite 5G யில் மூன்று கேமரா அமைப்புடன் வருகிறது இதன் மெயின் கேமரா 108MP வழங்கப்பட்டுள்ளது இதை தவிர முன் பக்கத்தில் செல்பிக்கு 50MP கேமரா இருக்கிறது

கடைசியாக இதன் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4,500mAh பேட்டரி 35W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது

இதையும் படிங்க:Infinix யின் புதிய போன் அறிமுகம் இதன் டாப் அம்சங்களை பாருங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :