100W சார்ஜிங் உடன் Honor 100 Series அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க
ஹானரின் ப்ளக்ஷிப் சீரிசான Honor 100 சீரிஸ் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்களின் விற்பனை சீனாவில் தொடங்கும்
ஹானர் 100 மற்றும் ஹானர் 100 ப்ரோ ஆகிய இரண்டு மாடல்கள் உள்ளன
ஹானரின் ப்ளக்ஷிப் சீரிசான Honor 100 சீரிஸ் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது விரைவில் இந்த ஸ்மார்ட்போன்களின் விற்பனை சீனாவில் தொடங்கும் மற்றும் அவை மற்ற சந்தைகளுக்குச் செல்லும். இந்த சீரிச்ல் ஹானர் 100 மற்றும் ஹானர் 100 ப்ரோ ஆகிய இரண்டு மாடல்கள் உள்ளன. புதிய ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 சிப்செட்டுடன் வரும் முதல் போனக ஹானர் 100 ஆனது. இந்தத் தொடரின் சிறந்த 5 அம்சங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
Honor 100 Series Price
இறுதியாக, விலையைப் பற்றி பேசுகையில், Honor 100 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை CNY 2,499 (தோராயமாக ரூ. 29,600) மற்றும் ப்ரோ மாடலின் விலை CNY 3,399 (தோராயமாக ரூ. 40,300) தில் தொடங்குகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஊதா, நீலம், வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய நான்கு நிற விருப்பங்களில் வருகின்றன.
Honor 100 Series Display
முதலில், டிஸ்ப்ளே பற்றி பேசுகையில், ஹானர் 100 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் OLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது 2664×1200 பிக்சல் ரேசளுசன் வழங்குகிறது. மறுபுறம், ப்ரோ வெர்சனில் 6.78-இன்ச் 1.5K OLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது 2700×1224 பிக்சல்கள் ரேசளுசன் வழங்குகிறது. இரண்டு மாடல்களும் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 2600 nits ஹை ப்ரைட்னஸ் வழங்குகிறது
Honor 100 Series Performance
பர்போமான்ஸ் பற்றி பேசினால் Honor 100 ஆனது Snapdragon 7 Gen 3 சிப்செட்டில் இயங்குகிறது, Honor 100 Pro ஆனது Snapdragon 8 Gen 2 சிப் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இது தவிர, இன்-ஹவுஸ் சி1 சிப் மற்றும் விசி லிக்விட் கூலிங் சிஸ்டமும் உள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும், ஹானர் 100 512 ஜிபி ரேமுடன் 16 ஜிபி வரை ஸ்டோரேஜ் விருப்பங்களையும், 1 டிபி வரை ஹானர் 100 ப்ரோவையும் வழங்குகிறது இரண்டு போன்களும் ஆண்ட்ராய்டு 13 ஐ அடிப்படையாகக் கொண்ட MagicOS 7.2 ஐ இயக்குகின்றன.
Honor 100 Series camera
இப்போது கேமராவைப் பற்றி பேசுகையில், ஹானர் 100 யின் கேமரா மாட்யுளுக்கு 50MP ப்ரைமரி லென்ஸ் மற்றும் 12MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் மேக்ரோ லென்ஸ் ஆகியவை அடங்கும். செல்ஃபிக்காக 50எம்பி முன்பக்க கேமராவைப் வழங்குகிறது இதற்கிடையில், Honor 100 Pro மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 50MP ப்ரைமரி சென்சார், 32MP OIS டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 12MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் மேக்ரோ லென்ஸ் ஆகியவை அடங்கும். இந்த போனின் முன்பக்கத்தில் இரண்டு கேமராக்கள் உள்ளன, அதில் ஒன்று 50MP லென்ஸ் மற்றொன்று 2MP லென்ஸ்.
இதையும் படிங்க:Black Friday sale: இந்த மாடல் ஐபோனில் அதிரடி ஆபர் வழங்கப்படுகிறது
Honor 100 Series Battery
பேட்டரியைப் பொறுத்த வரையில், இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இது 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இருப்பினும், புரோ மாடல் 66W பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது .
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile