Honor 10 அசத்தல் புதிய அம்சங்களுடன் அறிமுகமாகியது

Honor 10 அசத்தல் புதிய அம்சங்களுடன்  அறிமுகமாகியது
HIGHLIGHTS

ஹூவாய் ஹானர் பிரான்டு நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹானர் 10 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஹூவாய் நிறுவனத்தின் ஆன்லைன் பிரான்டு ஹானர் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்துள்ளது. 

செயற்கை நுண்ணறிவு 2.0 டெக்னோலஜி கொண்டு இயங்கும் புதிய ஸ்மார்ட்போனின் வடிவைப்பு ஹூவாய் P20 போன்றே காட்சியளிக்கிறது. இரட்டை கேமரா வடிவமைப்பு, முன்பக்க டிஸ்ப்ளே நாட்ச் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய ஹானர் 10 சர்வதேச வெளியீடு லண்டனில் மே 10-ம் தேதி நடைபெற இருக்கிறது.

புதிய ஹானர் 10 ஸ்மார்ட்போனில் ஹூவாய் நிறுவனத்தின் அதிநவீன AI (செயற்கை நுண்ணறிவு) 2.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் முன்பக்க கேமராவினை பயன்படுத்தி அழகிய போர்டிரெயிட் செல்ஃபிக்களை வழங்கும். ஆடியோவை பொருத்த வரை ஹானர் 10 ஸ்மார்ட்போனில் 7.1 மல்டி-சேனல் ஹைஃபை ஆடியோ சிப் வழங்கப்பட்டுள்ளது. இது 7-சேனல் ஆடியோ எஃபெக்ட்களை வழங்குகிறது.

ஹானர் 10 சிறப்பம்சங்கள்:

– 5.84 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080×2280 பிக்சல் எல்சிடி டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஹைசிலிகான் கிரின் 970 சிப்செட்
– மாலி-G72 MP12 GPU
– 6 ஜிபி ரேம்
– 16 எம்பி + 24 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
– 24 எம்பி செல்ஃபி கேமரா
– 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– கைரேகை சென்சார்
– 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3400 எம்ஏஹெச் பேட்டரி
– குவிக் சார்ஜிங் வசதி

சீனாவில் ஹானர் 10 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடலின் விலை CNY2,999 இந்திய மதிப்பில் ரூ.27,231 என்றும் 6 ஜிபி ரேம் / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் CNY2999 இந்திய மதிப்பில் ரூ.31,422 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

புகிய ஹானர் 10 ஸ்மார்ட்போன் பிளாக், டீல் மற்றும் ட்விலைட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. சீனாவில் ஹானர் 10 ஸ்மார்ட்போனின் விற்பனை ஏப்ரல் 27-ம் தேதி துவங்குகிறது. இதன் விற்பனை ஹூவாய் மால் மற்றும் இதர விற்பனையாளர்களிடம் நடைபெற இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo