Honor 10 Lite ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி மாதம் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது…!

Updated on 07-Jan-2019
HIGHLIGHTS

இந்த ஸ்மார்ட்போனில் 24MP செல்ஃபி கேமரா, ஹூவாய் கிரின் 710 பிராசஸர் மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் வழங்கப்படுகிறது.

ஹானர் இந்தியாவில் ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.இந்த  புதிய ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன்  ஜனவரி மாதம் 2019 கடைசிக்குள் அறிவிக்கப்படும் மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 24MP செல்ஃபி கேமரா, ஹூவாய் கிரின் 710 பிராசஸர் மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் வழங்கப்படுகிறது.

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல் உண்மையாகும் பட்சத்தில் வாட்டர் டிராப் வடிவம் கொண்ட ஹானர் பிராண்டின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என கூறப்படுகிறது. புதிய வடிவமைப்பு காரணமாக Honor 10 லைட் ஸ்மார்ட்போனில் 91 சதவிகித ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கும் என தெரிகிறது.

 Honor 10 Lite  சிறப்பம்சங்கள் 
புதிய ஹானர் ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் மற்றும் EMUI 9.0 சார்ந்த இயங்குதளம் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மற்றும் முன்பக்க கேமராக்களில் ஏ.ஐ. சார்ந்து இயங்கும் சீன் டிடெக்‌ஷன் வசதி வழங்கப்படலாம்.

இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகமான ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலாக புதிய ஹானர் 10 லைட் வெளியாக இருக்கிறது. முன்னதாக ஹூவாய் நிறுவனத்தின் புதிய சாதனத்திற்கான காப்புரிமை விவரங்கள் வெளியானதைத் தொடர்ந்து ஹானர் 10 லைட் சார்ந்த விவரங்கள் வெளியாகியிருக்கிறது. 

ஹூவாய் வை9 சிறப்பம்சங்களை பொருத்த வரை 6.5 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே, 2340×1080 பிக்சல் ஸ்கிரீன், கிரின் 710 சிப்செட், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் போட்டோக்கள் எடுக்க முன்பக்கம் மற்றும் பின்புறம் டூயல் பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படுகிறது. 

சீனாவில்  Honor 10 Lite யின் விலை 
நாம்  இந்த ஸ்மார்ட்போனை  பற்றி பேசினால் சீனாவில்  Honor 10 லைட் யின் விலை 1399 சீன  யுவனாக இருக்கிறது, அதாவது  சுமார் 14,400 ரூபாய்  ஆரம்பம் ஆகிறது. இந்த விலையில் பயனர்களுக்கு  4GB RAM  உடன் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வகையில் வருகிறது 

இதனுடன் இதில் 6GB RAM  உடன் 64GB ஸ்டோரேஜ்  மாடலின்  விலை 1,699 சீன  யுவனாக இருக்கிறது சுமார் இந்திய மதிப்பு 17,500 ரூபாயாக இருக்கும், இஎதனுடன் உங்களுக்கு  தெரியப்படுத்துவது என்னவென்றால் இந்த ஸ்மார்ட்போனில் மிகவும்  விலை உயர்ந்த  மாடல்  6 GB RAM  உடன் 128GB ஸ்டோரேஜில் வரும்  வேரியண்ட்  தான், நாம்  இந்த வெறியன்ட் விலை  பற்றி பேசினால் இதன் விலை 1899 சீன யுவனாக இருக்கிறது, அதாவது சுமார் 19,500  இந்திய மதிப்பு  ஆகும் இந்த ஸ்மார்ட்போன் வகையில் இந்த ஸ்மார்ட்போன் ப்ளூ,க்ரெடியன்ட் ரெட், லில்லியின்  வெள்ளை  மற்றும் மேஜிக் மேஜிக்  ப்ளாக் கலரில் பயனர்களுக்கு கிடைக்கிறது 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :