HMD விரைவில் மூன்று மிட் ரேன்ஜ் போன் வரும் பெயரே வித்யாசமா இருக்குபா

Updated on 30-May-2024
HIGHLIGHTS

HMD சமிபத்தில் அதன் பிராண்ட் பெயரில் சில புதிய மாடல்களை அறிமுகம் செய்தது

விரைவில் அதன் மூன்று புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும்

மூன்று போனின் விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது

HMD சமிபத்தில் அதன் பிராண்ட் பெயரில் சில புதிய மாடல்களை அறிமுகம் செய்தது மற்றும் இப்பொழுது லேட்டஸ்ட் லீக் மூலம் தெரியவந்தது என்னவென்றால், நிறுவனம் விரைவில் அதன் மூன்று புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும், மூன்று போனின் விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது அனைத்து மாடல்களும் மிட் ரேன்ஜ் போன்களாக தோன்றும். இருப்பினும், லீக் அம்சம் நிச்சயமாக போட்டியை தரகொடும் என்று கூறுகின்றன. இந்த மூன்று மாடல்களும் நைட்ஹாக், ப்ராஜெக்ட் ஃப்யூஷன் மற்றும் டாம்கேட் ஆகிய கோட் பெயர்களுடன் லீக் ஆகியுள்ளது

HMD லீக் செய்த அந்த மூன்று போன்

HMD MEME’S என்ற பெயரில் X பக்கத்தில் ஒரு பல ட்விட்டர்ஸ் சீரிசின் அப்கம்மிங் மாடல் யின் தகவல் லீக் ஆகியுள்ளது, அதன் போஸ்ட்டில் இந்த போன் கோட்நேம், விலை சிறப்பம்சம் மற்றும் இதனுடன் ரெண்டர்ஸ் தகவலும் வெளியாகியது இதில் Nighthawk மற்றும் Tomcat என்ற கோட் பெயருடன் கூடிய ப்ராஜெக்ட் ஃப்யூஷன் என்ற கோட் பெயரில் HMD செயல்படுவதாக இது தெரிவிக்கிறது. Tomcat மற்றும் Nighthawk ஆகியவை தற்போதுள்ள பல்ஸ் சீரிசுடன் பொருந்தக்கூடிய டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் வரும் என்று கூறப்படுகிறது..

Tomcat கோட்நேம் என்ற பெயர் இதற்க்கு முன்பும் வெளியானது, அப்பொழுது நாம் Geekbench வெப்சைட்டில் பார்த்தோம் இந்த லிஸ்ட்டின் மூலம் ஸ்னாப்டிராகன் 7S ஜெனரல் 2 SoC ஆக இருக்கும் இந்த போன் ஆக்டா-கோர் சிப்செட்டைக் கொண்டிருக்கும் என்று வெளியானது . Geekbench யில் போனனது முறையே சிங்கிள் மற்றும் மல்டி-கோர் டெஸ்டிங்கில் 965 மற்றும் 2625 ரெட்டிங்க்களை பெற்றது. லிஸ்ட்டை போலவே, டிப்ஸ்டரின் ட்வீட்டும் அதே சிப்செட்டை நோக்கிச் செல்கிறது.

ட்விட்டின் படி HMD Tomcat Snapdragon 7s Gen 2 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது, இதில் 8GB அல்லது 12GB ரேம் உடன் 256GB ஸ்டோரேஜ் கான்பிக்ரேசன் கொண்டு வரப்பட்டுள்ளது இதை தவிர இதில் கூறப்பட்டது என்னவென்றால் இந்த போனில் ஹை ரேசளுசன் 120Hz FHD+ AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதில் இது 108MP ப்ரைம் 8MP இரண்டாம் நிலை மற்றும் 2MP ஷூட்டர்களுடன் OIS மற்றும் முன்பக்கத்தில் 32MP ஷூட்டர் கொண்ட மூன்று பின்புற கேமரா செட்டிங்குடன் வரும் என்று கூறப்படுகிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 14 யில் இயங்கும் மற்றும் 33W சார்ஜிங்குடன் 4,900mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது IP67 சான்றிதழைப் பெறலாம் மற்றும் புளூடூத் 5.2, NFC, ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டிருக்கும்.

இதன் அடுத்த மாடல் HMD Nighthawk கோட்நேமுடன் லீக் ஆகியுள்ளது, ட்விட்டரின் படி இந்த போனின் டிஸ்ப்ளே மற்றும் கேமரா சிஸ்டம் Tomcat போலவே இருக்கும், ஆனால் இதில் 8MP அல்ட்ராவைட் லென்ஸ் கொண்டிருக்கும் மேலும் இந்தஸ்மார்ட்போனில் Snapdragon 4 Gen 2 சிப்செட்டுடன் வருகிறது இதனுடன் இதில் 5,000mAh பேட்டரி வழங்கப்படுகிறது.

இந்த இருண்டு போனின் மாடலின் விலையும் லீக் செய்யப்பட்டுள்ளது, த்விட்டேரின் படி HMD Tomcat யின் 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 400 யூரோ (கிட்டத்தட்ட 36,000 ரூபாய் ) மற்றும் 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்டின் விலை யூரோ 440 (தோராயமாக ரூ. 39,600) ஆகும். அதே நேரத்தில், HMD Nighthawk யின் 8GB + 128GB வேரியண்டின் விலை 250 யூரோ (சுமார் ரூ. 22,500) மற்றும் 8GB + 256GB சேமிப்பு வகையின் விலை 290 யூரோ (சுமார் ரூ. 26,200) ஆகும்.

அதே டிப்ஸ்டர், QCM6490 சிப்செட்டுடன் வரும் Project Fusion என்ற கோட் பெயருடைய முன்மாதிரி மாடல் பற்றியும் பேசியுள்ளார். இந்த சிப்செட்டில் Qualcomm யின் பல அப்பர் மிட் ரேன்ஜ் ப்ரோசெசர் இருக்கும் என நம்பப்படுகிறது, இதற்க்கு முன்பும் சில லீக்ஸ் மூலம் இதில் ப்ரோ டைப் மாடல் சப்போர்ட் கொண்டிருக்கும் என சிக்னல் காட்டியது, ட்வீட் படி, வரவிருக்கும் இந்த HMD போன் 6.6 இன்ச் FHD IPS டிஸ்ப்ளேவுடன் வரும். இது 108MP + 2MP PureView கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். ஃபோனில் 8ஜிபி ரேம் இருக்கும் மற்றும் 30W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்டுடன் 4,800mAh பேட்டரியுடன் வரும். அதன் அளவீடு 164 × 76 × 8.6 mm இருக்கும். இந்த போனில் Wi-Fi 6E, HMD Smart Outfitters, Dynamic Triple ISP, Pogo Pin மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் இருக்கும்.

இதையும் படிங்க Motorola யின் இந்த போனின் தகவல் கீக்பெஞ்சில் லீக்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :