HMD போரிங் போனை அறிமுகம் செய்துள்ளது, இதை Heineken மற்றும் Bodega உடன் சேர்ந்து இந்த போனை உருவாக்கப்பட்டது , இது ஒரு லிமிடெட் எடிசன் மற்றும் இது ஒரு பிலிப் வடிவில் கொண்டு வரப்பட்டது இந்த புதிய பீச்சர் போனின் பெயர் Boring என்று அழைக்கப்படுகிறது போரிங் போனில் ட்ரேன்சுலேன்ட் டிசைன் உள்ளது. இந்த மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்த முடியாது. மூன்றாம் தரப்பு ஆப்களும் பதிவிறக்கம் செய்யப்படவில்லை. ஒருமுறை சார்ஜ் செய்தால், இந்த போன் ஒரு வாரம் பேக்கப் நேரத்தையும் 20 மணிநேர டாக் டைமை வழங்கும். (Milan Design Week) போரிங் போன் ஷோ கேஸ் செய்யப்பட்டது.
நோக்கியா போன் தயாரிப்பாளரான HMD ஹெய்னெகன் மற்றும் கிரியேட்டிவ் நிறுவனமான போடேகாவுடன் இணைந்து ‘தி போரிங் ஃபோனை’ அறிமுகப்படுத்தியுள்ளது. சிறப்பு விஷயம் என்னவென்றால், இந்த விற்கப்படாது, மாறாக அது கிவ்அவே மூலம் கிடைக்கும். இந்த போன் 5 ஆயிரம் யூனிட்கள் தயாரிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொலைபேசியின் கிடைக்கும் தன்மை பற்றி மேலும் அறிய, ஹெய்னெக்கனின் வெப்சைட்டில் பதிவு செய்யலாம்.
இந்த போரிங் போன் ஒரு சிம்பல் பீச்சர் போன் ஆகும் இதில் இன்டர்நெட் பயன்படுத்த முடியாது. மூன்றாம் தரப்பு ஆப்களும் வேலை செய்யாது. இந்த ஃபோனிலிருந்து கால்களை மட்டுமே செய்ய முடியும் மற்றும் மெசேஜ் அனுப்பவும் பெறவும் முடியும். எல்லா ஃபிளிப் போன்களையும் போலவே, பயனர்கள் ஸ்க்ரீனை மூடுவதன் மூலம் காலை துண்டிக்கலாம்.
மேலும் இந்த போனின் மற்ற சிறப்பம்சங்கள் பற்றி பேசினால், The Boring Phone யில் 2.8 இன்ச் யின் QVGA இன்னார் டிஸ்ப்ளே மற்றும் 1.77 இன்ச் கவர் டிஸ்ப்ளே இருக்கிறது 0.3 மெகாபிக்சல் கேமரா மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் உள்ளது. இந்த ஃபோன் 2G, 3G மற்றும் 4G நெட்வொர்க்குகளில் கால் மற்றும் டெக்ஸ்ட் சப்போர்ட் செய்கிறது.. ஒரு அம்சமாக, மக்கள் தங்கள் டயல் லிஸ்டில் எண்களைச் சேர்க்கலாம். பிரபலமான ஸ்னேக் கேமும் இதில் முன் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது
இதையும் படிங்க::Itel Super Guru 4G பீச்சர் போன் அறிமுகம் YouTube மற்றும் UPI சப்போர்ட் இருக்கும்