HMD கொண்டு வருகிறது Nokia Lumia 1020 போன்ற புதிய போன், பெயரை கூட சஸ்பென்சாக இருக்கு
HMD இந்த ஆண்டு தொடக்கத்தில் Nokia Lumia 920 அடிப்படையிலான டிசைனுடன் HMD Skyline போனை அறிமுகம் செய்தது
இதில் 144Hz ரேப்ர்ராஸ் ரேட்டுடன் 6.55 இன்ச் pOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது
நோக்கியா லூமியா 1020 என்ற மற்றொரு நோக்கியா லூமியா போனின் டிசைனின் அடிப்படையில் புதிய ஸ்மார்ட்போனை நிறுவனம் விரைவில் அறிமுகம்
HMD இந்த ஆண்டு தொடக்கத்தில் Nokia Lumia 920 அடிப்படையிலான டிசைனுடன் HMD Skyline போனை அறிமுகம் செய்தது, இந்த போனின் அம்சங்கள பற்றி பேசினால், இதில் 144Hz ரேப்ர்ராஸ் ரேட்டுடன் 6.55 இன்ச் pOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது இது ஸ்னாப்டிராகன் 7S ஜெனரேஷன் 2 ப்ரோசெசருடன் கூடிய 108 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவைக் கொண்டுள்ளது.
நோக்கியா லூமியா 1020 என்ற மற்றொரு நோக்கியா லூமியா போனின் டிசைனின் அடிப்படையில் புதிய ஸ்மார்ட்போனை நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யக்கூடும் என்று சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. இருப்பினும், இந்த வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் பெயர் இன்னும் அறியப்படவில்லை. சமீபத்தில், லீக் ரெண்டர், கூறப்படும் போனின் டிசைன் வெளிப்படுத்தியுள்ளது.
Nokia Lumia 1020 யில் என்ன சிறப்பு இருக்கும்
HMD நியூஸ் அறிக்கையின்படி இந்த போனில் ஒரு மாதமாக வேலை செய்கிறது இது 2013 யில் அறிமுகப்படுத்தப்பட்ட ப்ளாக்ஷிப் நோக்கியா லூமியா 1020 ஐ அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த கூறப்படும் HMD ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு ரெண்டரை வெளியீடு பகிர்ந்துள்ளது. இது HMD ஸ்கைலைனைப் போன்ற ஒரு பெட்டி போன்ற கட்டமைப்பைக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. எவ்வாறாயினும், HMD ஸ்மார்ட்போன் மையமாக சீரமைக்கப்பட்ட வட்ட பின்புற கேமரா மாட்யுளை கொண்டிருக்கும் என்று வதந்தி பரவுகிறது, அதே நேரத்தில் HMD ஸ்கைலைன் ஒரு வெர்டிக்கள் ஐலேன்ட் கொண்டுள்ளது. இந்த வட்ட வடிவ கேமரா யூனிட் பழைய நோக்கியா லூமியா 1020 போலே இருக்கிறது இந்த கேமரா மாட்யுளில் 5 சிறிய ஸ்லாட்டுகள் இருப்பதாகத் தெரிகிறது, அதில் 4 கேமராக்கள் மற்றும் LED ஃபிளாஷ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போனின் கேமரா பற்றி பேசினால், இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) சப்போர்ட் மற்றும் 41 மெகாபிக்சல் முதன்மை பின்புற கேமரா சென்சார் மூலம், அந்த நேரத்தில் கேமரா பிரியர்களுக்கு நோக்கியா லூமியா 1020 சிறந்த தேர்வாக இருந்தது. Lumia 1020 அடிப்படையிலான HMD ஸ்மார்ட்போன் கேமராவை மையமாகக் கொண்ட தொலைபேசியாகவும் இருக்கலாம். Lumia 1020 அடிப்படையிலான HMD ஸ்மார்ட்போன் பழைய நோக்கியா மாடலைப் போலவே பிரைட்டன மஞ்சள் விருப்பத்தில் வரக்கூடும் என்று அறிக்கை கூறுகிறது. HMD ஸ்மார்ட்போனின் பெயர் அல்லது வேறு எந்த சிறப்பம்சமும் குறித்தும் இதுவரை ஆன்லைனில் எதுவும் வரவில்லை. இருப்பினும், கூறப்படும் ஸ்மார்ட்போன் பற்றிய கூடுதல் தகவல்கள் வரும் மாதங்களில் வெளியாகலாம்.
இதையும் படிங்க: Samsung Galaxy S24 FE அறிமுகம் செய்ய தயார் இதில் என்ன என்ன அம்சங்கள் இருக்கும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile