HMD யின் புதிய ஸ்மார்ட்போனின் டிசைன் லீக் எப்படி இருக்கும் பாருங்க

HMD யின் புதிய ஸ்மார்ட்போனின் டிசைன் லீக் எப்படி இருக்கும் பாருங்க

HMD Sage யின் சில புதிய அம்சம் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது, HMD யில் இருந்து கூறப்படும் இந்த போனின் லீக், சில சிறிய மாற்றங்களுடன் செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட HMD ஸ்கைலைனைப் போலவே ஸ்மார்ட்போன் தோற்றமளிக்கும் என்று கூறும் டிசைன் ரெண்டரை கொண்டுள்ளது. HMD சேஜின் டிசைன் , இந்த ஆண்டு ஜூலை மாதம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட HMD க்ரெஸ்ட் சீரிசை போலவே உள்ளது. இந்த மாடலின் சில அம்சங்களின் லீக் குறிப்பிடப்பட்டுள்ளது.

HMD Sage லீக் தகவல்

HMD Sage யின் லீக் படை இதன் டிசைன் ரெண்டர் X அக்கவுண்டில் HMD_MEME’S (@smashx_60) மூலம் ஷேர் செய்யப்பட்டது, தொலைபேசி நீலம், பச்சை மற்றும் சிவப்பு ஆகிய மூன்று கலர் விருப்பங்களில் கிடைக்கிறது. பின்புற கேமரா யூனிட் தளவமைப்பு உள்ளிட்ட பின் பேனல், போனின் டிசைன் HMD க்ரெஸ்ட்டைப் போலவே இருக்கும் அல்லது HMD ஸ்கைலைன் போனுடன் சில மாற்றங்களுடன் பொருத்தமாக இருக்கும் என்று தெரிவிக்கிறது.

அதன் பின்புற பேனலில் மேல் இடது மூலையில் ஒரு செவ்வக கேமரா அலகு தெரியும். பேனலின் மற்ற பகுதிகளைப் போலல்லாமல், கேமரா ஐலேண்ட் கருப்பாகத் தெரிகிறது. ஸ்கைலைன் மாடலைப் போலவே போனின் மூலைகளும் கொஞ்சம் பெட்டியாக இருக்கலாம்.

மற்றொன்றில் இந்த போனனது 90Hz அப்டேட் வீதத்துடன் 6.55-இன்ச் முழு-HD+ OLED ஸ்க்ரீனை கொண்டிருக்கும் என லீக் பரவியுள்ளது. லீக்கின் படி, போன் Unisoc T760 5G சிப்செட்டில் வேலை செய்யும். HMD சேஜ் 50 மெகாபிக்சல் மெயின் ரியர் சென்சார் மற்றும் 50 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டரைப் பெற வாய்ப்புள்ளது.

போனின் கனெக்டிவிட்டி ஆப்சன் பற்றி பற்றி பேசினால் இதில் USB Type-C 2.0 போர்ட் 3.5 mm ஜேக் மற்றும் NFC சப்போர்ட் செய்கிறது, ஃபோன் 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் . கூடுதலாக, HMD சேஜ் டஸ்ட் மற்றும் வாட்டார் ஸ்ப்லாஷ் பாதுகாப்பதற்காக IP52-மதிப்பிடப்பட்ட கட்டமைப்புடன் வரும் என்று கூறப்படுகிறது. தொலைபேசியில் மேட் பூச்சு கொண்ட கிளாஸ் முன் பேனல் இருக்கலாம்.

இதையும் படிங்க:Diwali Sale குறைந்த விலையில் இந்த 5G போனை அதிரடி ஆபரில் வாங்கலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo