HMD Hyper யின் Nokia Lumia நினைவுபடுத்தகூடிய ஸ்மார்ட்போன் தகவல் லீக்

Updated on 14-Aug-2024
HIGHLIGHTS

HMD சமிபத்தில் அதன் Crest மற்றும் Crest Max இந்தியாவில் அறிமுகம் செய்தது

இப்பொழுது இது இதன் மற்றொரு ஸ்மார்ட்போன் HMD Barbie phone போன்ற போனில் வேலை செய்கிறது

இதன் வரக்கூடிய மற்றொரு அப்கம்மிங் போன் பற்றி பேசினால் இது HMD Hyper என கூறப்படுகிறது.

HMD சமிபத்தில் அதன் Crest மற்றும் Crest Max இந்தியாவில் அறிமுகம் செய்தது மற்றும் இப்பொழுது இது இதன் மற்றொரு ஸ்மார்ட்போன் HMD Barbie phone போன்ற போனில் வேலை செய்கிறது. கூடுதலாக டிப்ஸ்டர் @smashx_60 on X Twitter) பக்கத்தில் ஒரு சில தகவலை வெளியிட்டுள்ளார் மற்றும் இதன் வரக்கூடிய மற்றொரு அப்கம்மிங் போன் பற்றி பேசினால் இது HMD Hyper என கூறப்படுகிறது.

இதன் தோற்றத்தை வைத்து பார்த்தால் இது கிட்டத்தட்ட நோக்கியா லுமியா இன்ச்பைர்ட் HMD Skyline போலவே இருக்கிறது. இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது, ஸ்மார்ட்போன் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் முழு-HD+ ரெசளுசனுடன் OLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், HMD ஹைப்பர் டிரிபிள் ரியர் கேமரா செட்டிங் கொண்டிருக்கலாம், இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS), 13 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமராவுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா இருக்கும். இதன் முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கேமரா பற்றி பேசுகையில் கேமரா 4K ரெசளுசன் மற்றும் வினாடிக்கு 30 பிரேம்கள் (fps) வரை வீடியோ பதிவு செய்ய முடியும். பயனர்கள் 1080p 60fps ரெசளுசனில் போட்டோ எடுக்கலாம்.HMD Hyper ஆனது Snapdragon 6 Gen 1 ப்ரோசெசருடன் அறிமுகமஅகலம் இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் இணைக்கப்படலாம், இது மைக்ரோ SD கார்டு வழியாக அதிகரிக்கலாம் டிப்ஸ்டரின் கூற்றுப்படி, ஃபோன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 4,700mAh பேட்டரியைப் பெறலாம்.

ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் அதன் டிசைன் நோக்கியா லூமியா 920 மூலம் ஈர்க்கப்பட்டதாக இருக்கலாம், இது தெளிவான மஞ்சள் பேனலைக் கொண்டிருக்கும். இது ஒரு பிளாட்டன பாக்ஸி பிரேம் கருப்பு நிற பெசல்களுடன் வட்டமான டிஸ்ப்லேவை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. பவர் மற்றும் வால்யூம் பொத்தான்கள் வலது பக்கத்தில் வைக்கப்படும் என்று தோன்றுகிறது. கைபேசியின் பின்புறம் மேல் இடதுபுறத்தில் பின்புற கேமரா மாட்யுல் உடன் HMD பிராண்டிங் இருக்கலாம்.

இதையும் படிங்க:நீங்கள் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த Google Pixel 9 சீரிஸ் அறிமுகம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :