HMD Global அறிமுகம் செய்தது HMD Easy Pay இதனால் என்ன பயன் ?

HMD Global அறிமுகம் செய்தது HMD Easy Pay இதனால் என்ன பயன் ?
HIGHLIGHTS

HMD குளோபல் நிறுவனம், HMD Easy Pay என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது

இது DMI ஃபைனான்ஸ் உடன் இணைந்து உருவாக்கப்பட்ட ஸ்மார்ட்போன் ஃபைனான்சிங்

இந்தத் திட்டம் தினசரி கூலித் தொழிலாளர்களுக்கு ஸ்மார்ட்போன் வாங்க உதவும். என்று கூறப்படுகிறது.

எச்எம்டி குளோபல் நிறுவனம், HMD Easy Pay என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது DMI ஃபைனான்ஸ் உடன் இணைந்து உருவாக்கப்பட்ட ஸ்மார்ட்போன் ஃபைனான்சிங் செய்வதற்க்கு இது உதவுகிறது,

அதாவது இந்தியாவில் தினசரி கூலியால் பிழைப்பு நடத்தும் மக்கள் தொகை அதிகம். அப்படிப்பட்டவர்களுக்கு மொத்தமாக பணம் கொடுத்து விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் வாங்க முடியாது,. இந்தத் திட்டம் தினசரி கூலித் தொழிலாளர்களுக்கு ஸ்மார்ட்போன் வாங்க உதவும். என்று கூறப்படுகிறது.

HMD Easy Pay என்றால் என்ன அதனால் என்ன நன்மை ?

DMI ஃபைனான்ஸ் உடன் சேர்ந்து வாடிக்கையாளர்கள் நோக்கியா ஸ்மார்ட்போன்களை வாங்குவதற்க்காக இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது, இதை தெளிவாக சொல்லவேண்டும் என்றால் எச்எம்டி ஈஸி பே என்பது ஒரு நிதிச் சேவையாகும், இது ஸ்மார்ட்போன் வாங்கும் போது வட்டியில்லா EMI வசதியை உங்களுக்கு வழங்கும். 6 முதல் 8 மாதங்களுக்கு EMI யில் நீங்கள் ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.,

தற்போது EMI யில் ஸ்மார்ட்போன் வாங்குவது விலை உயர்ந்தது, ஆனால் இந்த சிக்கலில் இருந்து விரைவில் விடுபடலாம். இந்த சேவை நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கானது.

  • இந்த திட்டத்தின் உதவியுடன், ஸ்மார்ட்போன்களை எளிதான தவணைகளில் வாங்கலாம். இதற்கு தனி கட்டணம் வசூலிக்கப்படாது
  • இந்த திட்டத்தின் கீழ், டிஜிட்டல் அப்ளிகேஷன் செயல்முறை, இன்ஸ்டன்ட் அனுமதி மற்றும் இறுதி முதல் இறுதி வரை சேவை வழங்கப்படுகிறது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், 2 மணி நேரத்தில் உடனடி லோன் பெறலாம்.
  • இத்திட்டத்தின் கீழ், பயனர்களுக்கு நோ-காஸ்ட் EMI என்ற விருப்பம் வழங்கப்படும். மேலும், டவுன்பேமென்ட் ஆப்ஷனுடன் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது.

HMD Easy Pay Program யில் எந்த எந்த போன் கிடைக்கும்.

இந்த திட்டத்தின் கீழ், Nokia G42 8/256GB, Nokia C32, Nokia C22, மற்றும் Nokia C12 Pro போன்ற ஸ்மார்ட்போன்களை வாங்கலாம்.

இதில் தேவைப்படும் ஆவணங்கள் என்ன ?

  • இன்ஸ்டன்ட் ஃபோன் லோனுக்கு உங்களிடமிருந்து குறைந்தபட்ச ஆவணங்கள் தேவைப்படும். மேலும் அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் முறையில் இருக்கும்
  • லோனுக்கு தேவைப்படும் ஆவணம் ஆதார் கார்ட் பேங்க் அக்கவுன்ட் விவரங்கள் மற்றும் CIBIL ஸ்கோர் தேவைப்படும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ், நீங்கள் 6 முதல் 8 மாதங்களுக்கு EMI யில் ஸ்மார்ட்போன்களை வாங்க முடியும்

மேலும் தகவலுக்கு எச்எம்டி Easy Pay. அதிகாரபூர்வ வெப்சைட்டில் சென்று பார்க்கலாம்

இதையும் படிங்க: Jio, Airtel, VI யின் ரூ.500-க்குள் வரும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்ட்ம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo