Nokia பிரியர்களுக்கு சந்தோசமான செய்தி 2 ஆயிரம் விலையில் 2 போன அறிமுகம்.

Updated on 10-Aug-2023
HIGHLIGHTS

நோக்கியா 130 மியூசிக் மற்றும் நோக்கியா 150 உட்பட இரண்டு நோக்கியா ஃபீச்சர் போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது

Nokia 130 ஆனது வயர்டு மற்றும் வயர்லெஸ் ஆகிய இரண்டையும் ஆதரிக்கும் FM ரேடியோவைக் கொண்டுள்ளது.

Nokia 130 Musicபோனில் 2.4 இன்ச் ஸ்க்ரீன் இருக்கிறது

HMD குளோபல் நோக்கியா 130 மியூசிக் மற்றும் நோக்கியா 150 உட்பட இரண்டு நோக்கியா ஃபீச்சர் போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. Nokia 130 Music ஆனது, நல்ல உருவாக்கத் தரம் மற்றும் நீண்ட பேட்டரி ஆயுள் கொண்ட ம்யுசிக் விரும்புபவர்களுக்காக பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் நோக்கியா 150 இந்த வகையின் பிரீமியம் போன் ஆகும்.

Nokia 130 Music விலை மற்றும்  சிறப்பம்சம்

இது ஒரு பீச்சர் போன் ஆகும், ம்யுசிக்கை அதிகம் விரும்புவோர்களுகாக  அறிமுகம் செய்யப்பட்டது., இதில் பவர்புல்  ஸ்பீக்கர் மற்றும் MP3 ப்ளேயர்  ஆப் வழங்குகிறது இது தவிர மைக்ரோ எஸ்டி கார்டு அதாவது மெமரி கார்டுக்கான ஆதரவும் உள்ளது. Nokia 130 ஆனது வயர்டு மற்றும் வயர்லெஸ் ஆகிய இரண்டையும் ஆதரிக்கும் FM ரேடியோவைக் கொண்டுள்ளது.

Nokia 130 Musicபோனில் 2.4 இன்ச் ஸ்க்ரீன் இருக்கிறது  இது இரட்டை GSM 900/1800 நெட்வொர்க்கிற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. போனில் 32 ஜிபி வரை SD கார்டுக்கான சப்போர்ட் கிடைக்கிறது இதில் 3.5mm ஆடியோ ஜாக் உள்ளது.

நோக்கியா 130 மியூசிக் 1450எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 34 நாட்கள் பேக்கப் நேரத்தை வழங்குவதாகக் கூறப்படுகிறது. போனில் 2,000 காண்டேக்ட்களை வரை சேமிக்க முடியும் மற்றும் 500 எஸ்எம்எஸ் சேமிக்க முடியும். நோக்கியா 130 மியூசிக்கை டார்க் ப்ளூ, பர்பிள், லைட் கோல்ட் வண்ணங்களில் வாங்கலாம். நோக்கியா 130 மியூசிக்கின் டார்க் ப்ளூ மற்றும் பர்பிள் வண்ண வகைகளின் விலை ரூ. 1,849 மற்றும் லைட் கோல்ட் வேரியன்டின் விலை ரூ.1,949 ஆகும்.

Nokia 150 விலை மற்றும் சிறப்பம்சம்.

ரக்ட் குவாலிட்டி நோக்கியா 150 உடன் வலிமையுடன் வருகிறது. இந்த நானோ அமைப்பும் கிடைக்கிறது. இது வாட்டர் ரேசிடண்டிர்க்கான IP52 ரேட்டிங்கை  வழங்குகிறது இந்த நோக்கியா ஃபோனில் 1450Mahபேட்டரி உள்ளது, இது 20 நாட்கள் டாக் டைம் நேரம் 34 நாட்கள் பெக்கபையும் வழங்குகிறது.

இது ஃப்ளாஷ்லைட்டுடன் கூடிய VGA பின்புற கேமராவையும் கொண்டுள்ளது. நோக்கியா 150 ஆனது 2.4-இன்ச் திரை மற்றும் பவர்பல்ஸ் ஸ்பீக்கர்களுடன் கூடிய MP3 பிளேயருடன் வருகிறது. நோக்கியா 150, சார்கோல், சியான் மற்றும் சிவப்பு நிறங்களில் ரூ.2,699 விலையில் வாங்கலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :