HMD இந்திய சந்தையில் அதன் புதிய ஸ்மார்ட்போன் HMD Fusion அறிமுகம் செய்ய தயார் செய்கிறது , பிராண்ட் செப்டம்பர் மாதம் ஐரோப்பாவில் மாடுலர் டிசைனுடன் HMD ஃப்யூஷன் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. கடந்த மாதம், இது வெனோம் ஸ்மார்ட் அலங்காரத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. எச்எம்டி ஃப்யூஷன் பற்றி இங்கு தெளிவாக பார்க்கலாம்
இ-காமர்ஸ் தளமான Amazon யில் HMD Fusion பற்றிய டீசரை வெளியிட்டுள்ளது, இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியாவுக்கு வரும்போது, அமேசானில் விற்பனைக்கு கிடைக்கும். இருப்பினும், வெளியீட்டு தேதி இன்னும் வெளியிடப்படவில்லை. டீசர்கள் வர ஆரம்பித்துவிட்டதால், அதை வெளியிட அதிக நேரம் எடுக்காது.
HMD Fusion யில் 6.56 இன்ச் யின் LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது, அதன் ரெசளுசன் 720×1612 பிக்சல் மற்றும் 90Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது, இதை தவிர இந்த போனில் குவல்கம் ஸ்னப்டராகன் 4 ஜென் 2 சிப்செட் கொண்டுள்ளது, இந்த ஃபோனில் 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இதை தவிர இந்த போன் ஆண்ட்ரோய்ட் 14 ஆபரேட்டிங் சிஸ்டமில் வேலை செய்கிறது.அதன் பிறகு நிறுவனம் ஆண்ட்ரோய்ட்16 யில் அப்க்ரெட் செய்யப்படும் என உருதி அளித்துள்ளது.
இந்த போனின் கேமரா பற்றி பேசுகையில் , இந்த ஸ்மார்ட்போனில் 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் பின்புறத்தில் 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர இந்த போனில் 5,000Mah பேட்டரி உடன் 33W சார்ஜிங் ப்சப்போர்ட் வழங்குகிறது.
இதையும் படிங்க:Tecno யின் புதிய போனின் அறிமுக தேதி வெளியானது பார்க்க iPhone 13 போல இருக்கும்