Google அதன் Google Pixel 3 மற்றும் Pixel 3 XL பல அம்சங்களுடன் அறிமுகம் செய்யலாம்…!

Updated on 17-Sep-2018
HIGHLIGHTS

புதிய கூகுள் ப்ரோமோ பக்கத்தில் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போனக்ளின் நிறம் தெரியவந்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3 ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் 9-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், புதிய கூகுள் ப்ரோமோ பக்கத்தில் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போனக்ளின் நிறம் தெரியவந்துள்ளது.

புதிய டீசர் withgoogle.com என்ற இணைய முகவரி கொண்ட கூகுள் வலைத்தளத்தில் மிகவிரைவில் (coming soon) என்ற வார்த்தையுடன் இடம்பெற்று இருந்தது. வழக்கமான டூயல்-டோன் கருப்பு வெள்ளை நிறங்கள் தவிர இம்முறை புதிதாக மின்ட் நிறம் இடம்பெற்றிருக்கிறது.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பிக்சல் 2 XL மாடலில் இருந்த ஆரஞ்சு நிற பவர் பட்டன் இம்முறை மின்ட் நிறம் கொண்டிருக்கிறது. இத்துடன் பக்கவாட்டுகளிலும் மின்ட் நிறம் கொண்ட பிக்சல் 3 புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆகியிருந்தன. டீசரில் உள்ள புகைப்படத்தின் படி பிக்சல் 3 மாடல்களிலும் டூயல்-டோன் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.

Google Pixel 3XL லீக் ஆன சிறப்பம்சம் 

இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி பிக்சல் 3 மாடலில் நாட்ச் இல்லாமல் 5.5 இன்ச் 2160×1080 பிக்சல் 18:9 டிஸ்ப்ளே, டூயல் முன்பக்க ஸ்பீக்கர், கிளாஸ் + மெட்டல் பேக், பின்புறம் கைரகை சென்சார், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி, டூயல் 8.1 எம்.பி. செல்ஃபி கேமரா, F/1.8 மற்றும் F/2.2 மற்றும் 2915Mah பேட்டரி மூலம் பவர் கொடுக்கப்படலாம்  என கூறப்படுகிறது.

பிக்சல் 3XL மாடலில் 6.2 இன்ச் 1440×2960 பிக்சல் 19:9 ரக டிஸ்ப்ளே, நாட்ச், டூயல் முன்பக்க ஸ்பீக்கர், கிளாஸ் + மெட்டல் பேக், பின்புறம் கைரகை சென்சார், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி, டூயல் 8.1 எம்.பி. செல்ஃபி கேமரா, F/1.8 மற்றும் F/2.2 மற்றும் 3430 எம்.ஏ.ஹெச். பேட்டரி, வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் யு.எஸ்.பி. டைப்-சி ஹெட்போன்களுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் இதர விவரங்கள் அடுத்த மாதம் தெரியவரும். வழக்கம்போல் இந்த ஆண்டும் கூகுள் தனது ஹார்டுவேர் நிகழ்வினை யூடியூப் சேனலில் நேரலை செய்யும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :