கூகிளின் Pixel Fold அறிமுக தேதியை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
அனைத்து லீக்களும் வெளிவந்த பிறகு, கூகிள் இறுதியாக பிக்சல் போல்ட் பற்றிய அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலை செய்துள்ளது. கூகுளின் முதல் போல்டப்பில் போன் பிக்சல் ஃபோல்ட் இந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மே 10 அன்று Google யின் Google I/O 2023 யில் Pixel Fold அறிமுகப்படுத்தப்படும்.
கூகுள் பிக்சல் போல்ட் தொடர்பான டீசரை வெளியிட்டுள்ளது, அதன்படி பிக்சல் போல்டரில் மூன்று பின்புற கேமராக்கள் இருக்கும். உட்புறத் ஸ்க்ரீனுடன் பெரிய பெசில் கிடைக்கும். பெஜில் மேலே உள்ள கேமராவையும் டீசரில் காணலாம். டீசரின் படி, கீல் தெரியவில்லை.
கசிந்த அறிக்கையின்படி, Pixel Fold 1840×2208 பிக்சல்கள் ரெஸலுசன் கொண்ட 7.6 இன்ச் ஸ்க்ரீனை வழங்கும் . டிஸ்பிளேவின் ரேஷியோ 6:5 மற்றும் பேனல் 120Hz அப்டேட் வீதத்துடன் OLED ஆக இருக்கும். டிஸ்பிளேயில் ஹை பிரைட்னஸ் 1450 நிட்களாக இருக்கும்.
போனில் மூன்று பின்புற கேமராக்கள் கிடைக்கும். கேமராவைப் பொறுத்தவரை, பிக்சல் போல்டரில் 48 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ் இருக்கும், அதனுடன் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் OIS கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இரண்டாவது லென்ஸ் 10.8 மெகாபிக்சல்களின் அல்ட்ரா வைட் ஆங்கிள் இருக்கும். இதில் மூன்றாவது லென்ஸ் 10.8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸாக இருக்கும், அதனுடன் 20x சூப்பர் ரெஸ் ஜூம் கிடைக்கும்.
Pixel Fold ஐபிஎக்ஸ்8 ரேட்டிங்கை வழங்கும் .மேலும் இந்த போனின் விற்பனை ஜூன் 27 முதல் தொடங்கும். மே 10 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் கூகுள் தனது புதிய பிக்சல் 7a ஃபோனையும் வழங்க உள்ளது.
✨May The Fold Be With You✨https://t.co/g6NUd1DcOJ#GoogleIO #PixelFold
May 10 pic.twitter.com/K8Gk21nmo8— Made by Google (@madebygoogle) May 4, 2023
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile