digit zero1 awards

Google Pixel 8A யில் கிடைக்கிறது 13000 டிஸ்கவுன்ட்

Google Pixel 8A யில் கிடைக்கிறது 13000 டிஸ்கவுன்ட்
HIGHLIGHTS

oogle Pixel 8A ஸ்மார்ட்போனில் சிறந்த டிஸ்கவுன்ட் சலுகையை வழங்குகிறது

இதிலிருந்து நீங்கள் போனை குறைந்த விலையில் வாங்க முடியும்

போனை வாங்கினால் இன்ஸ்டன்ட் தள்ளுபடியாக ரூ.13000 கிடைக்கும்.

கூகுள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட Google Pixel 8A ஸ்மார்ட்போனில் சிறந்த டிஸ்கவுன்ட் சலுகையை வழங்குகிறது, இதிலிருந்து நீங்கள் போனை குறைந்த விலையில் வாங்க முடியும். போனை வாங்கினால் இன்ஸ்டன்ட் தள்ளுபடியாக ரூ.13000 கிடைக்கும். இந்த போனின் விற்பனை மே 14 அன்று 2024 ஆரம்பமாகியது

Google Pixel 8A விலை மற்றும் ஆபர்

Google Pixel 8A ஸ்மார்ட்போனின் MRP ரூ.52,999. ICICI கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் போது 4000 ரூபாய் இன்ஸ்டன்ட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், உங்கள் பழைய போனில் ரூ.9000 எக்ஸ்சேஞ்ச் சலுகையை அனுபவிக்க முடியும். இந்த இரண்டு சலுகைகளையும் நீங்கள் அதிகபட்சமாகப் பயன்படுத்த முடிந்தால், நீங்கள் ரூ. 13 ஆயிரம் டிஸ்கவுன்ட் பெற முடியும். இது தவிர, வரவிருக்கும் கூகுள் பிக்சல் 8A ஸ்மார்ட்போனை ரூ.3,333 EMI யில் நீங்கள் வாங்க முடியும்.

இந்த போன் நான்கு கலர் விருப்பத்தில் Aloe, Bay, Obsidian மற்றும் Porcelain வரும் இந்த போன் 128ஜிபி மற்றும் 256ஜிபி என இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் வருகிறது. 128ஜிபி வகையின் விலை ரூ.52,999, 256ஜிபி வேரியன்ட் ரூ.59,999க்கு வரும்.

Google Pixel 8A சிறப்பம்சம்

இந்த போனில் 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளே இருக்கும். இதன் பிக்சல் தீர்மானம் 1080 x 2400 பிக்சல்களாக இருக்கும். தொலைபேசி 120 ஹெர்ட்ஸ் சப்போர்டுடன் வரும். இது 2000 nits உச்ச பிரகாசத்தைப் பெறும். இதன் எடை 188 கிராம் மற்றும் திக்னஸ் 8.9 mm இருக்கும்

இந்த போன் Tensor G3 சிப்செட் உடன் வரும். பல AI அம்சங்கள் இதில் கிடைக்கும். இந்த போனில் 64 மெகாபிக்சல் ப்ரைம் கேமரா லென்ஸுடன் வரும். மேலும், 13 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ் வழங்கப்படும். இந்த வழியில் போன் இரட்டை கேமரா செட்டிங்குடன் வரும். முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் கேமரா உள்ளது. ஆண்ட்ராய்டு OS அப்டேட் உட்பட 7 வருட சாப்ட்வேர் சப்போர்டுடன் ஃபோன் வருகிறது. இதில் 4492 mAh பேட்டரி உள்ளது.

இதையும் படிங்க:Google மெசேஜில் எடிட் அம்சம் இனி தவறாக அனுப்பிவிட்டோம் என்ற டென்சன் வேண்டாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo