Google யின் இந்த போனுக்கு அதிரடியாக ரூ,15,000 டிஸ்கவுண்ட் குறைந்த விலையில் வாங்கலாம்

Updated on 26-Mar-2025

Google Pixel 9a அறிமுகம் செய்த பிறகு , அதன் முந்த போன் Google Pixel 8a, இப்பொழுது அதன் விலை குறைக்கப்பட்டு டிஸ்கவுண்ட் விலையில் வாங்க முடியும் , இது பிரீமியம் ஆனால் குறைந்த விலையில் போனை வாங்க ஸ்மார்ட்போனை வாங்க நினைப்பவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. பிக்சல் 8a முதலில் அதிக விலையில் இருந்தது, ஆனால் விஜய் சேல்ஸின் விலைக் குறைப்பு மற்றும் பேங்க் சலுகைகள் உடன் குறைந்த விலையில் வாங்கலாம், இப்போது அதை ரூ.35,000 க்கும் குறைவாக வாங்கலாம். குறைந்த விலையில் மிக சிறந்த அம்சம் கொண்ட பவர்புல் போனை வாங்க நினைத்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலையில் வாங்க முடியும்.

Google Pixel 8a டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் சலுகைகள்:

கூகிள் பிக்சல் 8a தற்போது ரூ.37,999க்கு கிடைக்கிறது, இதன் விலை ரூ.12,000க்கும் அதிகமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, HDFC, RBL அல்லது அதற்கு மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்ட்களை பயன்படுத்தினால் கஸ்டமர்களுக்கு ரூ.3,000 வரை தள்ளுபடி பெறலாம். கஸ்டமர்கள் தங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்தால் ஒட்டுமொத்த விலையில் குறைக்கலாம். ஆனால் அதன் வேல்யு மாடல் மற்றும் வேலை நிலைமைகளைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வாங்குபவர்கள் தங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப மாதத்திற்கு ரூ.1,842 (24 மாதங்களுக்கு) EMI தேர்வு செய்யலாம். பேங்க்கலை பொறுத்து, கஸ்டமர்கள் மேலும் நோ கோஸ்ட் EMI யில் விருப்பங்களையும் தேர்வு செய்யலாம். வாங்கிய பிறகு, வாங்குபவர்களுக்கு 285 புள்ளிகள் (ரூ.285 மதிப்புள்ள) கிடைக்கும், அதை விஜய் சேல்ஸிடமிருந்து அடுத்த வாங்குதலில் மீட்டெடுக்கலாம்.

Google Pixel 8a சிறப்பம்சம்.

Pixel 8a ஸ்மார்ட்போன் 6.1-இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, இது 120Hz ரெப்ராஸ் ரேட், 2,000 nits ஹை ப்ரைட்னாஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது Tensor G3 சிப்செட் மற்றும் Titan M2 பாதுகாப்பு சிப் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் ஏழு வருட OS புதுப்பிப்புகள், பாதுகாப்பு இணைப்புகள் மற்றும் அம்சக் குறைப்புகளைப் பெறும். இந்த ஸ்மார்ட்போன் தூசி மற்றும் நீர் எதிர்ப்புத் திறன் கொண்டது, IP67 மதிப்பீடு மற்றும் 18W வயர்டு சார்ஜிங் மற்றும் Qi-சான்றளிக்கப்பட்ட வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,404mAh பேட்டரி கொண்டது.

பிக்சல் 8a, லைவ் டிரான்ஸ்லேட், பெஸ்ட் டேக் மற்றும் மேஜிக் எடிட்டர் போன்ற பிக்சல் 8 தொடரின் பல முதன்மை அம்சங்களை உள்ளடக்கியது. தொலைபேசி அழைப்புகளின் போது ஒலி எதிர்வினைகள் மற்றும் காட்சி விளைவுகளை வழங்கும் ஆடியோ எமோஜிகளும் இதில் அடங்கும்.

பிக்சல் 8a ஆனது 64MP OIS முதன்மை சென்சார் மற்றும் 13MP அல்ட்ராவைடு லென்ஸுடன் கூடிய இரட்டை கேமரா அமைப்பையும், முன்பக்கத்தில் 13MP செல்ஃபி ஷூட்டரையும் கொண்டுள்ளது.

இதையும் படிங்க Realme P3 Ultra 5G புதிய போனில் அதிரடியாக 7000ரூபாய் டிஸ்கவுண்ட்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :