Google Pixel 8 ஆனது Pixe 7 விட சிறியதாக இருக்கும் என இதுவரை தகவல் கிடைத்துள்ளது.

Updated on 14-Apr-2023
HIGHLIGHTS

கூகுளின் வரவிருக்கும் Pixel 8 ஆனது 6.16 இன்ச் OLED டிஸ்ப்ளேவை பெறும்

Pixel 8 Pro முந்தைய ஜெனரேஷன் போலவே டிஸ்பிளேயைப் பெறும்

Pixel 8 ஆனது 150.5 x 70.8 x 8.9 mm டிஸ்ப்ளேவைப் பெறும்

Google Pixel 8 மற்றும் Pixel 8 Pro ஆகியவை இந்த வருடத்தில் அதிகம் பேசப்பட்ட போன்கள் ஆகும். கூகுளின் முந்தைய வெளியீட்டைப் பார்க்கும்போது, ​​இந்த போன்கள் ஆண்டின் மூன்றாவது அல்லது நான்காவது காலாண்டில் வரும் என்று சொல்லலாம். ஆனால், Pixel போன்கள் தொடர்பான லீக்கள் அவ்வப்போது புதிய தகவல்களுடன் வருகின்றன. ரெண்டர்கள் ஏற்கனவே Pixel 8 இன் தோற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன மற்றும் இது Pixel 7 விட மிகவும் காம்பெக்ட் போர்ம் பெக்டரில் வரும். கூகுளின் வரவிருக்கும் வழக்கமான மாடல் முந்தைய ஜெனரேஷன் விட சிறிய டிஸ்பிளே வழங்கும் என்பதை இப்போது ஒரு புதிய லீக் உறுதிப்படுத்தியுள்ளது.
 
Pixel 6 மற்றும் 7 யில் 6.32 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது, கூகுளின் வரவிருக்கும் Pixel 8 யில் 6.16 இன்ச் OLED டிஸ்ப்ளே கிடைக்கும். சிறிய டிஸ்பிளேவுடன், Pixel 8 இன்னும் சிறிய டிவைஸக மாறும். 6.1 இன்ச் OLED பேனல்களுடன் வரும் Pixel 6a அல்லது Pixel 7a விட இது சற்று பெரிய டிஸ்பிளே வழங்கும். முந்தைய CAD ரெண்டர்களின் அடிப்படையில், Pixel 8 ஆனது 150.5 x 70.8 x 8.9mm டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இது 155.6 x 73.2 x 8.7mm அளவைக் கொண்ட Pixel 7 விட சிறியதாக இருக்கும்.

இது ஒரு சிறிய ஆண்ட்ராய்டு பிளாக்ஷிப் டிவைஸக இருக்கும், இதில் சிறந்த பேட்டரி லைப் மற்றும் உயர்தர ஸ்பெசிபிகேஷன்கள் இருக்கும். 6.16-இன்ச் பேனல் மற்றும் காம்பெக்ட் புட்ப்ரின்ட் உடன் Pixel 8 ஆனது ஆண்ட்ராய்டு எகோஸிஸ்டெம் செட்டப்பில் உள்ள கேப்பை நிரப்பும்.

Pixel 8 Pro வைப் பொறுத்த வரையில், முந்தைய Pixel Pro போன்களில் பார்த்தது போல் 6.7 இன்ச் பேனலுடன் டிவைஸ் வரும் என்று டிஸ்ப்ளே ஆய்வாளர் Ross Young கூறுகிறார்.

Pixel 8 மற்றும் Pixel 8 Pro டிஸ்ப்ளே பேனல்களின் வெகுஜன உற்பத்தி மே மாதத்தில் தொடங்கும் என்று ஆய்வாளர் கூறுகிறார். கூகுளின் 2023 Pixel வரிசை அக்டோபரில் வெளியிடப்படும் என்று தெரிகிறது

Connect On :