Google Pixel 7 ஸ்மார்ட்போனில் 7000 ரூபாய் வரையிலான அதிரடி டிஸ்கவுண்ட் உடன் வாங்கலாம்.

Updated on 07-Apr-2023
HIGHLIGHTS

கூகுள் பிக்சல் 7 மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது, அதன் விலை ரூ.59,999 ஆக இருந்தது

ளிப்கார்ட் தளத்தில் பிக்சல் 7 மாடலுக்கு பல அசத்தலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.ஆனால் இன்று ரூ.49,999க்கு வாங்கலாம்

Axsis, SBI, HDFC , ICICI மற்றும் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 7 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது

கடந்த ஆண்டு கூகுள் பிக்சல் 7 மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது, அதன் விலை ரூ.59,999 ஆக இருந்தது  இந்த நிலையில், ப்ளிப்கார்ட் தளத்தில் பிக்சல் 7 மாடலுக்கு பல அசத்தலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.ஆனால் இன்று ரூ.49,999க்கு வாங்கலாம். விலை குறைப்பை பற்றி பார்ப்போம்:

Google Pixel 7 Price and Offer

பிக்சல் 7 (8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி) மாடல் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது ப்ளிப்கார்ட் தளத்தில் இதன் விலை ரூ. 56 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இதுதவிர அமெரிக்கன் Axsis, SBI, HDFC , ICICI மற்றும் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 7 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதன் மூலம் பிக்சல் 7 விலை ரூ. 49 ஆயிரத்து 999 என்று மாறிவிடுகிறது. இதுதவிர தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ. 30 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போன் ஸ்னோ, அப்சிடியன் மற்றும் லெமன்கிராஸ் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

Google Pixel 7 Specs.

கூகுளின் சமீபத்திய முதன்மையானது டென்சர் ஜி2 சிப்செட் உடன் வருகிறது, இது விரைவான குரல் உதவியை உறுதியளிக்கிறது: நேரலை மொழிபெயர்ப்பு, கூகுள் உதவியாளர் மற்றும் குரல் தட்டச்சு. மொபைலில், மேக்ரோ மோட் மற்றும் ஃபேஸ் அன்ப்ளர் போன்ற அம்சங்களுடன் 50எம்பி பிரைமரி கேமரா மற்றும் 12எம்பி அல்ட்ராவைடு கேமராவையும் பெறுவீர்கள். மேலும், கூகுள் பிக்சல் 7ல் 6.3 இன்ச் 90 ஹெர்ட்ஸ் FHD AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. கூகிளின் கூற்றுப்படி, அதன் பேனல் முந்தைய தலைமுறை தொலைபேசியை விட 25% பிரகாசமாக உள்ளது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :