கூகுள் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போனின் லைவ் போட்டோக்கள் இன்டர்நெட்டில் லீக் ஆனது..!
அக்டோபர் 4-ம் தேதி அறிமுகமாகும் என்பதை கூகுள் தெரியாத்தனமாக அறிவித்தது, இந்நிலையில் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போனின் விவரங்கள் லைவ் போட்டோக்கள் மூலம் தெரியவந்துள்ளது
கூகுள் பிக்சல் 3 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. எனினும் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இன்டர்நெட்டில் லீக் ஆகி வருகின்றன.
முன்னதாக பிக்சல் 3 ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் 4-ம் தேதி அறிமுகமாகும் என்பதை கூகுள் தெரியாத்தனமாக அறிவித்தது, இந்நிலையில் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போனின் விவரங்கள் லைவ் போட்டோக்கள் மூலம் தெரியவந்துள்ளது.
அதன்படி ஸ்மார்ட்போனுடன், யுஎஸ்பி டைப்-சி ஹெட்போன்கள், யுஎஸ்பி டைப்-சி கேபிள், அடாப்டர், 3.5 mm யில் இருந்து யு.எஸ்.பி. டைப்-சி டாங்கிள், இன்-இயர் இயர்போன்கள் மற்றும் பேப்பர் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
டிசைன் பொருத்த வரை நாட்ச் டிஸ்ப்ளே, மற்றும் கீழ்புறம் ஸ்டீரியோ ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது. நாட்ச் இருப்பதோடு டிஸ்பளேவின் ஒரு ஓரத்தில் பேட்டரி இன்டிகேட்டர் வடது புறமாக மாற்றப்பட்டுள்ளது. நாட்ச் பகுதியில் செல்ஃபி கேமரா மற்றும் வழக்கமான சென்சார்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது.
பின்புறம் ஒற்றை பிரைமரி கேமரா, கைரேகை சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ் மற்றும் கூகுள் லோகோ இடம்பெற்றுள்ளது. சிறப்பம்சங்களை பொருத்த வரை புதிய ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் 1440×2960 டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, ஆன்ட்ராய்டு பி இயங்குதளம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகைப்படம் எடக்க தலைசிறந்த முறையில் அம்சங்கள் மேம்பட்டு, ஹார்டுவேர் தரப்பிலும் அதிகப்படியான அப்டேட் செய்யப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. விலை மற்றும் விற்பனை தவிர ஸ்மார்ட்போனின் பெரும்பாலான விவரங்கள் தற்சமயம் லீக் ஆகியுள்ளது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile