Google Pixel 3 ஸ்மார்ட்போன் அக்டோபர் 9 தேதி அறிமுகமாகும்…!
புதிய ஸ்மார்ட்போன்களுடன் கூகுள் நிறுவனத்தின் புதிய ஹார்டுவேர் சாதனங்களும் இதே விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Google அடுத்த சில பிலாஷிப் ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் 9 அன்று வேறுபட்ட ஹார்டவெர் மூலம் அறிமுகம் செய்யப்படும். அதாவது பிக்சல் 3 ஸ்மார்ட்போன்கள் அடுத்த மாதம் தொடங்கப்படலாம். நிறுவனம் மீடியாவுக்கு விலை லிஸ்ட் அனுப்பத் தொடங்கியுள்ளதாக . கூகுள் நிறுவன 2018 பிக்சல் ஸ்மார்ட்போன்களின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி கூகுள் ஹார்டுவேர் நிகழ்வு அக்டோபர் 9-ம் தேதி அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கிறது. அழைப்பிதழில் எண் 3 அச்சிடப்பட்டு இருப்பது கூகுள் பிக்சல் 3 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட இருப்பதை உணர்த்துகிறது.
புதிய ஸ்மார்ட்போன்களுடன் கூகுள் நிறுவனத்தின் புதிய ஹார்டுவேர் சாதனங்களும் இதே விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பிக்சல் வாட்ச் அறிமுகம் செய்யாது என்றும், மற்ற ஹார்டுவேர் உற்பத்தியாளர்களுடன் இணைந்து வியர் ஓ.எஸ்.-ஐ மேம்படுத்துவதில் கூகுள் அதிக கவனம் செலுத்தலாம் என கூறப்படுகிறது.
Google Pixel யின் சிறப்பம்சங்கள்
இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி பிக்சல் 3 மாடலில் நாட்ச் இல்லாமல் 5.5 இன்ச் 2160×1080 பிக்சல் 18:9 டிஸ்ப்ளே, டூயல் முன்பக்க ஸ்பீக்கர், கிளாஸ் + மெட்டல் பேக், பின்புறம் கைரகை சென்சார், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி, டூயல் 8.1 எம்.பி. செல்ஃபி கேமரா, F/1.8 மற்றும் F/2.2 மற்றும் 2915 mah . பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது.
பிக்சல் 3XL மாடலில் 6.2 இன்ச் 1440×2960 பிக்சல் 19:9 ரக டிஸ்ப்ளே, நாட்ச், டூயல் முன்பக்க ஸ்பீக்கர், கிளாஸ் + மெட்டல் பேக், பின்புறம் கைரகை சென்சார், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி, டூயல் 8.1 எம்.பி. செல்ஃபி கேமரா, F/1.8 மற்றும் F/2.2 மற்றும் 3430 Mah. பேட்டரி, வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் யு.எஸ்.பி. டைப்-சி ஹெட்போன்களுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் இதர விவரங்கள் அடுத்த மாதம் தெரியவரும். வழக்கம்போல் இந்த ஆண்டும் கூகுள் தனது ஹார்டுவேர் நிகழ்வினை யூடியூப் சேனலில் நேரலை செய்யும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile