தற்போதய காலத்தில் குழந்தைகளும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு மிகவும், அடிமையாகி உள்ளது, நம் வீட்டிலும் சரி வெளியிலும் சரி குழந்தைகளின் அழுகை சமாளிக்க கூட ஸ்மார்ட்போன் கொடுப்பதன் மூலம் தான் அமைதி ஆகிறது. மேலும் சில குழந்தை படிப்பில் மிகவும் மந்தமாகவும் இருக்கும். மேலும் குழந்தையை மிகவும் எளிதாக கற்றுக்கொள்ள கூகுள் நிறுவனம் போலோ (bolo )ஆப் அறிமுகம் செய்துள்ளது
மேலும் குழந்தைகள் மிகவும் எளிதாக எந்த சிரமமும் இன்றி எளிதாக கற்றுக் கொள்ள முடியும், முக்கியமாக ஸ்மார்ட்போன்களில் மூழ்கி கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு இந்த ஆப் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் கூகுள் அசிஸ்டண்ட் டியா என அழைக்கப்படுகிறது. இது குழந்தைகளுக்கு உச்சரிப்பை பொறுமையாக சொல்லிக் கொடுக்கிறது. குழந்தைகள் உச்சரிப்பில் தவறு செய்யும் போது அவர்களை சரி செய்கிறது. குழந்தைகளுக்கு தனிப்பட்ட டியூஷன் டீச்சர் போன்று வாசிக்க சொல்லிக் கொடுக்கும் வகையில் போலோ ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 40 ஆங்கில கதைகளும், 50 இந்தி கதைகளை போலோ ஆப் கொண்டிருக்கிறது. குழந்தைகளில் வாசிக்கும் திறனுக்கு ஏற்ப ஒவ்வொரு கதைகளிலும் கடினத்தன்மை மாறுபடும். இத்துடன் செயலியினுள் சுவாரஸ்ய வார்த்தை விளையாட்டுகளில் பங்கேற்று குழந்தைகள் இன்-ஆப் ரிவார்டு மற்றும் பேட்ஜ்களை வென்றிட முடியும்.
மேலும் இதனுடன் பல்வேறு குழந்தைகள் ஒன்றிணைந்து ஒரே செயலியில் பங்கேற்று, அவர்களது தனிப்பட்ட திறமையை கண்டறிந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் தியா ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இருக்கும் சொற்களை மட்டும் வாசிக்கும் திறன் கொண்டிருக்கிறது. எனினும், விரைவில் மற்ற மொழிகளில் இயங்கும் படி இந்த செயலியில் அப்டேட் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.