கூகுள் ஸ்மார்ட்போன்களுக்கு ரூபாய்.10,000 வரை கேஷ்பேக்

கூகுள் ஸ்மார்ட்போன்களுக்கு ரூபாய்.10,000 வரை கேஷ்பேக்
HIGHLIGHTS

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன்களின் விலையில் ரூ.10,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.61,000 மற்றும் ரூ.73,000 விலையில் அறிமுகம் செய்யப்பட்டன. கடந்த ஆண்டு டிசம்பரில் இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டது. தற்சமயம் Rs,11,001 மற்றும் Rs,.8,001 குறைக்கப்பட்ட விலையில் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதுமட்டுமின்றி பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு சிட்டி பேங்க் சார்பில் கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது. பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன்களுக்கு முறையே ரூபாய்.8,000 மற்றும் ரூபாய்.10,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

இந்த கேஷ்பேக் சலுகை சிட்டி பேங்க் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது பெற முடியும். சிட்டி பேங்க் கேஷ்பேக் சலுகையில் பிக்சல் 2 ஸ்மார்ட்போன்களை ரூ.41,999 முதல் வாங்கிட முடியும்.

பிக்சல் 2 ஸ்மார்ட்போன்களுக்கான கேஷ்பேக் விவரம்:
 கூகுள் பிக்சல் 2 64 ஜிபி விலை Rs,41,999 (சிட்டி பேங்க் சலுகையை சேர்த்து ரூ.19,001 வரை குறைவு)
கூகுள் பிக்சல் 2 128 ஜிபி விலை Rs,50,999 (சிட்டி பேங்க் சலுகையை சேர்த்து ரூ.19,001 வரை குறைவு)
கூகுள் பிக்சல் 2 XL 64 ஜிபி விலை Rs,54,999 (சிட்டி பேங்க் சலுகையை சேர்த்து ரூ.18,001 வரை குறைவு)
கூகுள் பிக்சல் 2 XL 128 ஜிபி விலை Rs,63,999 (சிட்டி பேங்க் சலுகையை சேர்த்து Rs,18,001 வரை குறைவு)

சிட்டி பேங்க் வழங்கும் கேஷ்பேக் சலுகையை பிளிப்கார்ட் மற்றும் இந்தியா முழுக்க தேர்வு செய்யப்பட்ட ஆஃப்லைன் விற்பனை மையங்களில் பெற முடியும். இத்துடன் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.18,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

பிக்சல் 2 ஸ்மார்ட்போன்களுக்கு சிட்டி பேங்க் வழங்கும் கேஷ்பேக் தொகை பணம் செலுத்தியதில் இருந்து 90 நாட்களுக்குள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கேஷ்பேக் சலுகை பிப்ரவரி 28-ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo