OnePlus 6 ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியாவில் 13 லிருந்து 16 மே பாஸ்ட் AF விற்பனையில் பல கேஷ் பேக் வழங்குகிறது

OnePlus 6 ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியாவில் 13 லிருந்து 16 மே பாஸ்ட்  AF விற்பனையில் பல கேஷ் பேக் வழங்குகிறது
HIGHLIGHTS

மே 16 ம் தேதி லண்டனில் லேன்சனில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அடுத்த நாள் 17 மே அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த படும் இதனுடன் இதன் கேஸ் பேக் ஆபர் எப்படி பெறுவது என்பதை பார்ப்போம்

ஒன்பிளஸ் இந்தியா ஃபாஸ்ட் ஏஎஃப் (Fast AF) விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனையில் வாடிக்கையாளர்கள் அமேசான் இந்தியா தளத்தில் ரூ.1000 மதிப்புடைய இ-கிஃப்ட் கார்டுகளை மே 13 முதல் மே 16-ம் தேதி வரை வாங்க வேண்டும். இதை கொண்டு மே 21 மற்றும் மே 22-ம் தேதிகளில் ஒன்பிளஸ் 6 வாங்க பயன்படுத்த முடியும். 

இந்த கிஃப்ட் கார்டுகளை கொண்டு ஸ்மார்ட்போன் வாங்கும் போது ரூ.1000 மதிப்புடைய கேஷ்பேக் தொகையை அமேசான் பே பேலென்ஸ் கணக்கில் பெற முடியும். இத்துடன் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனிற்கு வழங்கப்படும் ஒரு வருட வாரண்டியுடன் சேர்த்து மூன்று மாதங்களுக்கு கூடுதல் வாரன்டி வழங்கப்படுகிறது. 

ஒன்பிளஸ் கேஷ்பேக் தொகையை பெறுவது எப்படி?

– ரூ.1000 ஒன்பிளஸ் 6 அமேசான் இந்தியா இ-கிஃப்ட் கார்டினை ஃபாஸ்ட் ஏஎஃப் விற்பனையில் வாங்க வேண்டும்.

– மே 21 மற்றும் மே 22-ம் தேதிகளில் ஒன்பிளஸ் 6 வாங்கும் போது கிஃப்ட் கார்டினை ரிடீம் செய்து, அமேசான் பே கணக்கில் ரூ.1000 கேஷ்பேக் பெற முடியும்.

– இதன்மூலம் ஒன்பிளஸ் 6 வாங்குவோர் ரூ.2000 மதிப்புடைய சலுகையை பெற முடியும். இத்துடன் அறிமுக தின சலுகையும் வழங்கப்படுகிறது. இதில் தேர்வு செய்யப்பட்ட வங்கிகள் சார்பில் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

– மேலும் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனிற்கு வழங்கப்படும் ஒரு வருட வாரண்டியுடன் சேர்த்து மூன்று மாதங்களுக்கு கூடுதல் வாரன்டி பெற முடியும்.

முன்னதாக ஒன்பிளஸ் 6 அறிமுக நிகழ்வுக்கு கலந்து கொள்வதற்கான நுழைவு சீட்டுகள் விற்பனை துவங்கிய நான்கு நிமிடங்களில் நிறைவுற்றன. மே 17-ம் தேதி நடைபெற இருக்கும் ஒன்பிளஸ் 6 அறிமுக நிகழ்வினை நேரலையில் பார்க்கும் வசதியும் வழங்கப்படுகிறது. 

ஒன்பிளஸ் 6 அறிமுக நிகழ்வை தொடர்ந்து சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, பூனே, ஐதராபாத், கொல்கத்தா மற்றும் ஆமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் பாப்-அப் நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன. இங்கு ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனினை குறிப்பிட்ட நகரங்களில் அனுபவிக்கவும் முதலில் வாங்கவும் முடியும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo