Flipkart Sale iPhone 15 pro சீரிஸ் யில் கிடைக்கும் அதிரடி டிஸ்கவுன்ட்

Updated on 24-Sep-2024
HIGHLIGHTS

Flipkart Big Billion Days 2024 விற்பனையில் பெரும் தள்ளுபடியுடன் வாங்கலாம்

இந்த விற்பனையில் ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் விலை ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போன்களுக்கான பொதுவான தள்ளுபடியைத் தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க்களின் கார்டுகள் மற்றும் EMI ட்ரேன்ச்செக்சன்களுக்கும் கூடுதல் தள்ளுபடிகள்

அமெரிக்க டிவைஸ் தயாரிப்பாளரான ஆப்பிளின் ஐபோன் 15 ப்ரோ மாடல்களை இ-காமர்ஸ் நிறுவனமான Flipkart Big Billion Days 2024 விற்பனையில் பெரும் தள்ளுபடியுடன் வாங்கலாம். அதாவது இந்த விற்பனை செப்டம்பர் 27 நடைபெற இருக்கிறது இந்த விற்பனையில் ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் விலை ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும்.

Flipkart Big Billion Days 2024 iPhone 15 Pro சீரிஸில் கிடைக்கும் அதிரடி டிஸ்கவுன்ட்

இந்த ஸ்மார்ட்போன்களுக்கான பொதுவான தள்ளுபடியைத் தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க்களின் கார்டுகள் மற்றும் EMI ட்ரேன்ச்செக்சன்களுக்கும் கூடுதல் தள்ளுபடிகள் கிடைக்கும். இது தவிர, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மற்றும் நோ-காஸ்ட் EMI ஆகிய விருப்பங்களும் இருக்கும். ஐபோன் 16 அறிமுகத்திற்குப் பிறகு இந்தியாவில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விற்பனையை ஆப்பிள் நிறுத்தியுள்ளது. Phone 15 Pro யின் 128 GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 1,09,900ரூபாய் மற்றும் iPhone 15 Pro Max யின் 1,34,900ரூபாயில் இருக்கிறது இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் பிளிப்கார்ட்டின் விற்பனையில் முறையே ரூ.89,999 மற்றும் ரூ.99,999க்கு வாங்கலாம்.

iPhone 15 Pro Max to be available under Rs 1 lakh in Flipkart Big Billion Days sale

Flipkart டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க்களின் EMI ட்ரேன்செக்சன் மூலம் வாங்கும் போது எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் வழங்கும். இதன் மூலம், இந்த ஸ்மார்ட்போன்களின் விலை விற்பனை விலையை விட குறைவாக இருக்கும். ஐபோன் 16 சீரிஸ் அறிமுகத்திற்குப் பிறகு நாட்டில் சில பழைய பொருகளில் விற்பனையை ஆப்பிள் நிறுத்தியுள்ளது. இதில் iPhone 15 Pro, iPhone 15 Pro Max, iPhone 13 மற்றும் Apple Watch Series 9 ஆகியவை அடங்கும். இந்த பொருட்கள் Apple யின் வெப்சைட்டில் லிஸ்ட் செய்யப்படவில்லை ஆனால் மூன்றாம் தரப்பு ரீடைளர் விற்பனையாளர்கள் அல்லது அப்டேட் செய்யப்பட்ட கடைகள் மூலம் கிடைக்கலாம். கடந்த ஆண்டு, iPhone 15 Pro Max மற்றும் Apple Watch Series 9 iPhone 15 Pro உடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆப்பிளின்ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் ஆகியவற்றுக்கான தேவை முந்தைய சீரிஸ் இதே போன்ற மாடல்களுடன் ஒப்பிடும்போது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் அதிகரித்துள்ளது. ஐபோன் 16க்கான ப்ரீ ஆர்டர்களுக்கு நிறுவனம் சுமார் 10 சதவீதம் கூடுதல் தேவையையும், முதல் வார இறுதியில் ஐபோன் 16 பிளஸுக்கு சுமார் 48 சதவீதம் கூடுதல் தேவையையும் பெற்றுள்ளது. iPhone 16 சீரிஸ் முன்கூட்டிய ஆர்டரின் முதல் வார இறுதியில் சுமார் 37 லட்சம் யூனிட்கள் விற்பனையாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 15 சீரிஸ் உடன் ஒப்பிடும்போது இது சுமார் 12.7 சதவீதம் குறைவு. புதிய ஐபோன் தொடரின் வெளியீட்டில் ஆப்பிள் நுண்ணறிவு அம்சங்கள் இல்லாதது குறைந்த எண்ணிக்கையிலான முன்கூட்டிய ஆர்டர்களுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :