OnePlus 6 சில்க் வைட் லிமிட்டட் எடிசன் இந்தியாவில் இன்று அமேசானில் விற்பனை ஆரம்பம் ஆகிவிட்டது

OnePlus 6 சில்க் வைட் லிமிட்டட் எடிசன் இந்தியாவில் இன்று அமேசானில் விற்பனை ஆரம்பம் ஆகிவிட்டது
HIGHLIGHTS

ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் மிரர் பிளாக், மிட்நைட் பிளாக் மற்றும் லிமிட்டெட் எடிஷன் சில்க் வைட் என மூன்று நிறங்களில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ஒன்பிளஸ் 6 லிமிட்டெட் எடிஷன் சில்க் வைட் ஸ்மார்ட்போன் விற்பனை இன்று நள்ளிரவு (ஜூன் 5- 12.00 மணி) முதல் துவங்கியது. அமேசான் இந்தியா மற்றும் மற்றும் ஒன்பிளஸ் ஸ்டோர்களில் புதிய லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது. ஒன்பிளஸ் 6 லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை வாங்குவோருக்கு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒன்பிளஸ் 6 சில்க் வைட் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் மிக நேர்த்தியாக பாலிஷ் செய்யப்பட்டு, தோற்றம் மற்றும் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. விசேஷ பியல் பவுடர் பூசப்பட்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் ஆறு வெவ்வேறு வித கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் மென்மையாகவும், வெல்லை நிற டெக்ஸ்ச்சர் கொண்டிருக்கிறது.

ஒன்பிளஸ் 6 சிறப்பம்சங்கள்:

– 6.28 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 ரக AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– 2.8 ஜிகாஹர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
– அட்ரினோ 630 GPU
– 8 ஜிபி ரேம் 
– 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
– ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியா) மற்றும் ஆக்சிஜன் ஓஎஸ் 5.1
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா
– 16 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– வாட்டர் ரெசிஸ்டண்ட்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட்
– 3300 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் டேஷ் சார்ஜ்

இந்த சாதனத்துடன் இதில் சில அறிமுக ஆபர் வழங்குகிறது.நீங்கள் இதை சிட்டி பேங்க் கிரெடிட் அல்லது டெபிட் கார்ட்  மூலம்  வாங்கினால்  நீங்கள் இதில்   Rs 2,000  வரையிலான கேஷ்பேக் பெறலாம் இதனுடன் நிறுவனம் இதில்  No Cost EMI ஒப்சனும் வழங்குகிறது. இதை தவிர Kotak 811 ஆப் டவுன்லோடு செய்வதன் மூலம்  12 மதத்தின் எக்சிடன்டல்  வரண்டியும் வழங்குகிறது 

மேசான் பிரைம் வீடியோவில் 250 ரூபாயும், அமேசான் கின்டெல் இ-புத்தகத்தில் 500 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும் .இதனுடன் பங்குதாரர்களுக்கான ரூபாய் 2,00 கேஷ்பேக் அடங்கும்  மற்றும் இந்த சாதனத்தில் ஐடியா சந்தாதாரர்களுக்கான காப்பீடு மற்றும் ரூ .25,000 வரை பயன் பெறும் விமானம் மற்றும் ஹோட்டல் முன்பதிவுகளில் ClearTrip இருந்து. வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo