குவல்கம் அதன் அடுத்த ஜெனரேசன் ப்ளக்ஷிப் ப்ரோசெசரான Snapdragon 8 Gen 3 அறிமுகம் செய்துள்ளது. பிராண்டின் இந்த சிப்செட்டை Maui, US யில் நடந்த ஸ்னாப்டிராகன் Summit மூலம் அறிவித்தார் குவால்காம் அதன் புதிய சிப்செட்டை “டைட்டன் ஆஃப் ஆன்-டிவைஸ் இன்டெலிஜென்ஸ்” என்று அழைக்கிறது. முந்தைய ஜெனரேசன் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 உடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இது மிகவும் சக்திவாய்ந்த ப்ரோசெசர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது, பின்னர் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப் 30% அதிக சக்தி வாய்ந்தது மற்றும் 20% அதிக செயல்திறன் கொண்டது.
ஸ்னாப்டிராகன் 8 Gen 3 ஒரு சில ஸ்மார்ட்போன் பிராண்ட்களான சியோமி, ஒன்ப்லஸ் மற்றும் IQOO போன்ற ப்லக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் இந்த லேட்டஸ்ட் குவல்கம் ப்ரோசெசர் கொண்டு வந்துள்ளது அந்த வகையில் இங்கு என்ன போன் இருக்கிறது என்று பாப்போம் வாங்க.
இதையும் படிங்க : HMD Global அறிமுகம் செய்தது HMD Easy Pay இதனால் என்ன பயன் ?
iQOO சமீபத்தில் அதன் லேட்டஸ்ட் அப்கம்மிங் iQOO 12 5G இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 8 Gen 3 உடன் வரும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும் என்று அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த போனில் இந்திய வெளியீட்டு தேதியை பிராண்ட் இன்னும் வெளியிடவில்லை, ஆனால் இது நவம்பர் 7 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. எனவே இது டிசம்பர் 2023 மற்றும் ஜனவரி 2024 க்கு இடையில் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.
ஒன்ப்ளஸ் அதன் அப்கம்மிங் போன் ஆன OnePlus 12 ஸ்மார்ட்போன் யில் ஸ்னப்ட்ரகன் 8 ஜென் 3 கொண்டிருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது., ஸ்னாப்டிராகன் உச்சி மாநாட்டில் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டது. பிரபல நிகழ்வின் போது OnePlus 12 ஐ காட்சிப்படுத்தியது, இது Oppo யின் டிஸ்ப்ளே P1 சிப் மூலம் இயக்கப்படும் “ஓரியண்டல் ஸ்கிரீன்” இடம்பெறும் என்பதை வெளிப்படுத்தியது. இந்த டிஸ்ப்ளே 2K வரை ரேசளுசன் சப்போர்ட் செய்யும்.
ஸ்னாப்டிராகன் 8 Gen 3 உடன் வரும் முதல் ஸ்மார்ட்போன்களின் லிஸ்டில் Xiaomi 14 சீரிஸும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சீரிஸில் இரண்டு மாடல்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அவற்றில் ஒன்று ஸ்டேண்டர்ட் மற்றும் ஒரு புரோ மாடல். Xiaomi இந்த சீரிஸின் சீன அறிமுகத்தை அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் 26 ஆம் தேதி சீனாவிலும், சில மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் வெளியிடப்படும்.