Google நிறுவனம் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் முன் அவற்றின் இந்திய விலை விவரங்கள் இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது. தற்போது கிடைத்திருக்கும் தகவல்களில் கூகுள் பிக்சல் 3A XL ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. ஸ்டோரேஜ் மாடல் விலை ரூ.44,999 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இத்துடன் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களும் வெளியாகியிருக்கிறது. அதன்படி பிக்சல் 3A XL ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, 12.2 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி பட்ஜெட் பிக்சல் போன்களிலும் உயர் ரக பிக்சல் 3 போன்றே நைட் சைட் கேமரா அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனில் பிக்சல் 3 போன்ற கேமரா அமைப்பு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களிலும் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் இதேபோன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என்றே கூறப்பட்டது. பிக்சல் 3ஏ X: ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் 2220×1080 பிக்சல் OLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 3700Mah . பேட்டரி கொண்டிருக்கும் என தெரிகிறது.
வழக்கமான வெள்ளை மற்றும் கருப்பு நிறம் மட்டுமின்றி பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3A XL ஸ்மார்ட்போன்கள் புதிதாக பர்ப்பிள் நிற வேரியண்ட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
Google Pixel 3a மற்றும் Pixel 3a XL இந்தியாவில் ஒரே நேரத்தில் அறிமுகமாகும்.மற்றும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது Pixel 3a வின் விலை Rs 40,000சுமார் இருக்கும் மற்றும் 3a XL சுமார் Rs 50,000 விலையில் இருக்கும்