POCO F6 Deadpool Limited Edition இந்தியாவில் அறிமுகம், இதன் லுக் பாத்து மயங்கிருவிங்க
Poco இந்தியாவில் தனது முதல் ஸ்பெசல் எடிசன் ஸ்மார்ட் மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது
Poco F6 Deadpool Edition ஆகஸ்ட் 7 முதல் Flipkart வழியாக நாட்டில் வாங்குவதற்குக் கிடைக்கும்
12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் கூடிய ஒற்றை வேரியண்டின் விலை ரூ.29,999 என்றும் கூறினார்
Poco இந்தியாவில் தனது முதல் ஸ்பெசல் எடிசன் ஸ்மார்ட் மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. Poco இந்தியாவின் நாட்டின் தலைவர் ஹிமான்ஷு டாண்டன் டைம்ஸ் நெட்வொர்க்கிடம், கூறினார் Poco F6 Deadpool Edition ஆகஸ்ட் 7 முதல் Flipkart வழியாக நாட்டில் வாங்குவதற்குக் கிடைக்கும் என்றும், 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் கூடிய ஒற்றை வேரியண்டின் விலை ரூ.29,999 என்றும் கூறினார்.Poco இந்தியாவின் தலைவர் ஹிமான்ஷு டன்டொன் டைம்ஸ் நெட்வர்க்கு தெரிவித்தார்
புதிய Poco போன் இன்று திரையரங்குகளில் வெளியாகும் மார்வெல் திரைப்படமான டெட்பூல் மற்றும் வால்வரின் உடன் இணைந்து இந்த கூட்டணி தொடங்கப்பட்டது.
டைம்ஸ் நெட்வர்க் மற்றும் டிஜிட்டுக்கு இந்த போனை பற்றிய லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது இது தவிர, நாங்கள் ஹிமான்ஷுவுடன் போனின் பிரத்யேக அன்பாக்சிங் செய்துள்ளோம், அதை நீங்கள் எங்கள் சோசியல் மீடியா சேனல்களில் பார்க்கலாம். Poco F6 ஸ்பெஷல் எடிஷன் ஒரு தனித்துவமான ரீடைளர் பாக்ஸில் வருகிறது, இது மார்வெலின் மெர்சனரி ஆன்டிஹீரோவால் ஈர்க்கப்பட்ட பல டிசைன் கூறுகளைக் கொண்டுள்ளது.
இந்த போன் மார்வெல் கதாபாத்திரங்களால் ஈர்க்கப்பட்டுள்ளது. பின்புற பேனலை சுற்றியும் சிகப்பு லைன் இருப்பது Deadpool யில் பிரம்ம்தமாக பொருந்துகிறது இது டெட்பூல் மற்றும் வால்வரின் பின்புறத்தில் 3D தோற்றத்தைக் கொண்டுள்ளது, இதனுடன் இதன் கேமரா லைட்டில் Deadpool லோகோ கொண்டுள்ளது. இதன் கேமரா மாட்யுளின் கீழ் இயங்கும் மற்றொரு நுட்பமான டெட்பூல் பிராண்டிங் உள்ளது.
பெரிய பாக்ஸில் உள்ளே இரண்டு சிறிய பாக்ஸ்கள் உள்ளன – ஒன்று டெட்பூலின் முகத்துடன் மற்றொன்று வால்வரின் முகத்துடன் – ஒவ்வொரு மாடியுல் வெவ்வேறு பொருட்கள் இருந்தாலும். சிம் எஜெக்டர் கருவியில் உள்ள டெட்பூல் லோகோவும் நன்றாகத் தெரிகிறது, அதே நேரத்தில் படத்தின் பிராண்டிங் சார்ஜரில் தெரியும். சார்ஜரின் நிறம் இன்னும் வெண்மையாகவே உள்ளது, ஆனால் என்னைப் பொறுத்தவரை, இந்த தீம் கேபிள் மற்றும் சார்ஜரிலும் பயன்படுத்தப்பட்டிருந்தால், அது மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கும்.
இந்த பாக்ஸில் ஒரு ஸ்பெசல் கார்ட் அதில் இந்த திரைப்படத்தில் வரும் லைன் உள்ளது
“After some professional disappointments and ongoing midlife crisis, Wade Wilson now sells used cars. He is completely hung up his boots until his family, friends and whole world are threatened.
With everyone he loves at risk, Deadpool teams up with a reluctant Wolverine to fight for their survival and ultimately, their legacy.”
துரதிர்ஷ்டவசமாக, Poco தீம் UI க்கு நீட்டிக்கப்படவில்லை. இதன் பொருள் F6 ஸ்பெசல் எடிசனில் டெட்பூல் ஐகான்கள் அல்லது தீம் இல்லை.
ஹிமான்ஷு டைம்ஸ் நெட்வொர்க்கிடம், “எங்கள் பார்வையாளர்கள் ஜெனரல்-இசட். அவர்கள் எப்போதும் காரமான ஒன்றை விரும்புகிறார்கள். ஜவானில் ஷாருக் கான், பிக் பாஸில் சல்மான் கான் அல்லது அவுரி என எங்களின் அனைத்து ஒத்துழைப்பும் இப்படி இருந்திருக்கலாம். இருப்பினும், இப்போது நாங்கள் டெட்பூல் மற்றும் வால்வரின் உடன் ஒத்துழைத்துள்ளோம். POCO F6 யின் இந்த ஸ்பெசல் எடிசன் இந்தியாவுக்கான பிரத்யேக போனாக இருக்கும்.
POCO F6 Deadpool Limited Edition
Poco F6 யின் லிமிடெட் எடிசன் சிறப்பம்சம் இதிலிருக்கும் சிறப்பம்சம் என பார்த்தல் இதில் எந்த மாற்றமும் இல்லை இதிலிருக்கும் அனைத்து அம்சங்களும் அதே Poco F6 போலவே இருக்கிறது. இந்த போனில் ஒரு 6.67-இன்ச் 120Hz 1.5K AMOLED டிஸ்ப்ளே ஸ்க்ரீன் உடன் இதில் 50மெகாபிக்சல் மெயின் கேமரா மற்றும் 20 மேக்கபிக்சல் செல்பிக்கு கொடுக்கப்பட்டுள்ளது இதை தவிர இந்த போனில் Snapdragon 8s Gen 3 சிப்செட் உடன் 5000mAh பேட்டரி மற்றும் 90W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது.
இதையும் படிங்க :Realme NARZO N61 போனேன் அறிமுக தேதியை உறுதி செய்தது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile