Xiaomi யின் சப் ப்ரண்டான Redmi கடந்த வாரம் அதன் Note 13 serie சீனாவில் அறிமுகம் செய்தது, அதனை தொடர்ந்து தற்பொழுது Redmi Note 12 4G விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனின் விலை நேரடியாக ரூ.2000 குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்ட 6 மாதங்களிலேயே விலை குறைக்கப்பட்டுள்ளது., இந்த போன் சமீபத்தில் mi.com மற்றும் பிற இ-காமர்ஸ் தளங்களில் பட்டியலிடப்பட்டது. கூடுதலாக, Redmi Note 12 4G ஆனது இ-காமர்ஸ் தளங்களான Amazon மற்றும் Flipkart யில் குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.
Redmi Note 12 ஸ்மார்ட்போன் இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களில் கிடைக்கும் 6GB + 64GB மற்றும் 6GB + 128 GB. இந்த இரு வேரியன்ட் விலையும் தற்பொழுது குறைக்கப்பட்டுள்ளது இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்தின் விலை ரூ.16,999. ஆனால் ரூ.2000 கழித்த பிறகு, ரெட்மி நோட் 12 யின் விலை ரூ.14,999 ஆக உள்ளது. அதே 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.14,999க்கு பதிலாக ரூ.12,999 ஆக உள்ளது.
Xiaomi யின் அதிகாரப்பூர்வ வேப்சைட்டின்படி Xiaomi Redmi Note 12 வாங்கினால் ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது, இதை HDFC, ICICI, SBI மற்றும் Axis பேங்க் கிரெடிட் கார்டுகள் மூலம் அனுபவிக்க முடியும். 1,000 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. இதை தவிர நிறுவனம் ரூ,599 மதிப்புள்ள earbuds வழங்கப்படும், இதை தவிர நீங்கள் நோ கோஸ்ட் EMI யிலும் வாங்கலாம்.
Redmi Note 12 4G ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இதன் புதுப்பிப்பு விகிதம் 120Hz ஆகும். உச்ச பிரகாசம் 1200 நிட்ஸ் ஆகும்.
இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால் ஸ்னாப்டிராகன் 685 சிப்செட் சப்போர்ட் போனில் வழங்கப்பட்டுள்ளது., இந்த போன் 5 ஜிபி வெர்ஜுவல் ரேம் மற்றும் மொத்த 11 ஜிபி ரேம் ஆதரவுடன் வருகிறது.
கேமராவை பெற்றி பேசுகையில் இந்த போனில் மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இதன் ப்ரைம் கேமரா 50MP ஆகும். மேலும், 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 2எம்பி மேக்ரோ கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
Redmi Note 12 போன் MIUI 14 அடிபடையின் கீழ் இது Android 13 இயங்குகிறது இந்த போனில் 5000mAh பேட்டரி உடன் 33W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் IP53 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிச்டன்ட்
டிஜிட் தமிழில் அன்றாட டெக்னாலஜி யில் நியூஸ்,மொபைல்,கேட்ஜெட் , டெலிகாம் ,கம்பேரிசன் ,டிப்ஸ் & ட்ரிக்ஸ் என பல புதிய தகவல்களை துல்லியமாக வழங்குவோம். எங்கள் சேனலுக்கு உங்களின் சப்போர்ட் தேவை எனவே எங்களை போலோ செய்யுங்கள்.