Detel நிறுவனம் மூன்று புதிய மொபைல் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது…!

Updated on 22-Sep-2018
HIGHLIGHTS

புதிய ஃபீச்சர்போன்களில் வயர்லெஸ் FM மற்றும் லைவ் FM . அலாரம் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

டீடெல் நிறுவனம் மூன்று புதிய மொபைல் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. டி1 வைப், டி1 பல்ஸ் மற்றும் டி1 ஷைன் என அழைக்கப்படும் புதிய ஃபீச்சர்போன்களில் வயர்லெஸ் FM மற்றும் லைவ் FM . அலாரம் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

டீடெல் வைப் வைட்/புளு, வைட்/கிரீன், பிளாக்/கிரீன், பிளாக்/பிரவுன் போன்ற நிறங்களிலும், டீடெல் பல்ஸ் மொபைல்போன் பிளாக்/புளு, பிளாக்/கிரீன், பிளாக்/கிரெ, பிளாக்/ரெட் மற்றும் பிளாக்/எல்லோ போன்ற நிறங்களிலும், டீடெல் ஷைன் காஃபி மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

மூன்று ஃபீச்சர் போன்களும் ஒரு வருட வாரண்டியுடன் கிடைக்கிறது. இவற்றை பயனர்கள் டீடெல் அதிகாரப்பூர்வ வெப்சைட் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் வாங்கிட முடியும்.

புதிய ஃபீச்சர் போன்களில் 1.77 இன்ச் டிஸ்ப்ளே ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க டிஜிட்டல் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், டீடெல் வைப் மாடலில் மட்டும் எல்.இ.டி. ஃபிளாஷ்லைட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. மூன்று மொபைல்களிலும் டூயல் சிம் ஸ்லாட் மற்றும் 1050 Mah பேட்டரி மூலம் பவர் கொடுக்கப்பட்டுள்ளது..

இத்துடன் அப்டேட் செய்யப்பட்ட பேட்டரி செயல்திறன் வழங்க புதிய மொபைலில் பவர் சேவிங் மோட் வழங்கப்பட்டுள்ளது. இதனை ஆக்டிவேட் செய்ய 0 பட்டனை அழுத்திப்பிடிக்க வேண்டும். இந்த மொபைல்களில் பல்வேறு  மொழிகளில் இயக்க முடியும் என்பதால், பயனர்கள் தங்களது சொந்த மொழியில் டைப் செய்ய வேண்டும்.

வயர்லெஸ் FM அம்சம் வழங்கப்பட்டு இருப்பதால், பயனர்கள் தங்களுக்கு விருப்பமான ரேடியோ நிகழ்ச்சிகளை கேட்டு ரசிக்க முடியும். இத்துடன் லைவ் எஃப்.எம். வசதி வழங்கப்பட்டு இருப்பதால், பயனர்கள் ரேடியோ நிகழ்ச்சிகளை தவற விட வேண்டிய அவசியம் இருக்காது. இத்துடன் ஷெட்யூல்டு ரெக்கார்டிங் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய டீடெல் போன்களில் அதிகபட்சம் 800 கான்டாக்ட்களை பதிவு செய்து கொள்ளவும், 100 மெசேஜ்களை பதிவு செய்ய முடியும். கூடுதல் அம்சங்களாக ஆட்டோ கால் ரெக்கார்டிங், வீடியோ ரெக்கார்டிங், சவுன்டு ரெக்கார்டிங், டார்ச், ஆடியோ, வீடியோ பிளேயர், பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட கேம்கள், SMS மற்றும் புளூடூத் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.

மூன்று மாடல்களிலும் மைக்ரோ SD. கார்டு ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பு பிரச்சாரத்தின் அங்கமாக புதிய மொபைல் போன்களில் பேனிக் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை பயன்படுத்தினால் அவசர காலத்தில், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு இருக்கும் மொபைல் எண்ணிற்கு தகவல் வழங்கப்படும்.

இந்தியாவில் டீடெல் டி1 வைப், D 1 பல்ஸ் மற்றும் D 1 ஷைன் மாடல்களின் விலை முறையே ரூ.820, ரூ.830 மற்றும் ரூ.810 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :