மோட்டோரோலாவின் மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியாக இருப்பதை உணர்த்துகிறது. முன்னதாக மோட்டோ ஜி6 மற்றும் மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போன்களுடன் இந்த மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது .
இந்தியாவில் மோட்டோ ஜி6 மற்றும் மோட்டோ ஜி6 பிளே ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்ட நிலையில், மோட்டோ ஜி6 பிளஸ் வெளியீடு மட்டும் தாமதமானது. தாமதத்துக்கான காரணம், விற்பனை மற்றும் விலை சார்ந்த விவரங்கள் அறிவிக்கப்படாதது தான் .
மோட்டோ ஜி6 பிளஸ் சிறப்பம்சங்கள்:
– 5.93 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080×2160 பிக்சல் 18:9 ரக டிஸ்ப்ளே
– 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர்
– அட்ரினோ 508 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை நீட்டிக்கும் வசதி
– 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் லென்ஸ் எல்இடி ஃபிளாஷ், F/2.2
– 8 எம்பி செல்ஃபி கேமரா, ஃபிளாஷ், F/2.2
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
– 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத்
– 3200 எம்.ஏ.ஹெச். பேட்டரி
சர்வதேச சந்தையில் மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை EUR 299 (இந்திய மதிப்பில் ரூ.24,350) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் வெளியிடப்பட்ட மோட்டோ ஜி6 விலை ரூ.13,999 இல் துவங்குகிறது.