நோட் சீரிஸ் புதிய மாடலில் 5.99 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் MT6750 பிராசஸர், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ, 16 எம்.பி. பிரைமரி கேமரா, 0.3 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 8 எம்.பி. செல்ஃபி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் ஃபேஸ் அன்லாக் வசதி, கைரேகை சென்சார் வசதி கொண்டிருக்கும் புதிய நோட் 8 ஸ்மார்ட்போன் 4000 Mah. பேட்டரி மூலம் பவர் கொடுக்கப்பட்டுள்ளது..
Coopad Note 8 சிறப்பம்சங்கள்:
– 5.99 இன்ச் 2160×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் மீடியாடெக் MT6750 பிராசஸர்
– மாலி T860 GPU
– 4 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0
– 0.3 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4000 Mah பேட்டரி
Coopad நோட் 8 ஸ்மார்ட்போன் கருப்பு நிறம் கொண்டுள்ளது. இந்தியாவில் ரூ.9,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கூல்பேட் நோட் 8 ஸ்மார்ட்போன் பே.டி.எம். மால் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.