கோகோ கோலா ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகமாக இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், பிரபல டிப்ஸ்டரான முகுல் ஷர்மா புது ஸ்மார்ட்போனின் அதிக தரமுள்ள ரெண்டர்களை வெளியிட்டு இருக்கிறார். இதில் ஸ்மார்ட்போன் எப்படி காட்சியளிக்கும் என தெளிவாக தெரியவந்துள்ளது.
எனினும், டிப்ஸ்டர் முகுல் ஷர்மா வெளியிட்டு இருக்கும் ரெண்டர்களில் உள்ள கோகோ கோலா ஸ்மார்ட்போன் தோற்றத்தில் ரியல்மி 10 4ஜி போன்றே காட்சியளிக்கிறது. இதன் பின்புறம் இரட்டை கேமரா சென்சார்கள், எல்இடி ஃபிளாஷ், வலது புறத்தில் வால்யும் ராக்கர், வளைந்த எட்ஜ்கள் உள்ளன. ஸ்மார்ட்போனை சுற்றி சிவப்பு நிறம் கொண்டிருக்கிறது. இவை தவிர கோகோ கோலா ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் மர்மமாகவே உள்ளன.
இதோடு கோகோ கோலா ஸ்மார்ட்போன் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என அவர் தெரிவித்து இருக்கிறார். இதோடு புது ஸ்மார்ட்போனிற்கான கோகோ கோலா நிறுவனம் ஸ்மார்ட்போன் நிறுவனத்துடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. எந்த ஸ்மார்ட்போன் நிறுவனத்துடன் கோகோ கோலா கூட்டணி அமைக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
கோகோ கோலா ஸ்மார்ட்போன் ரியல்மி 10 4ஜி மாடலின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்ற பட்சத்தில் அதன் அம்சங்கள் பெரும்பாலும் ரியல்மி மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம். ரியல்மி 10 4ஜி மாடலில் 6.5 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், பன்ச் ஹோல் கட் அவுட், மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், LPDDR4X ரேம், 128 ஜிபி UFS2.2 ஸ்டோரேஜ், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 8 ஜிபி டைனமிக் ரேம் சப்போர்ட், ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யுஐ வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP B&W போர்டிரெயிட் கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
இவைதவிர பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3.5mm ஹெட்போன் ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இது ஸ்மார்ட்போனை 0 முதல் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 28 நிமிடங்களையே எடுத்துக் கொள்ளும். கனெக்டிவிட்டிக்கு 4ஜி, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் ஜிபிஎஸ் உள்ளது.
[Exclusive] Here's the all new #Cola Phone