CMF Phone 1 இன்று முதல் விற்பனை ஆபர் பற்றி பார்க்கலாம் வாங்க

Updated on 12-Jul-2024
HIGHLIGHTS

Nothing சமிபத்தில் அதன் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் ஆன CMF Phone 1 அறிமுகம் செய்தது

நிறுவனம் ஜூலை 8 ஆம் தேதி CMF Phone 1 அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்று அதாவது ஜூலை 12 அன்று முதல் முறையாக Flipkart மூலம் விற்பனைக்கு வருகிறது

Nothing சமிபத்தில் அதன் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் ஆன CMF Phone 1 அறிமுகம் செய்தது நிறுவனம் ஜூலை 8 ஆம் தேதி CMF Phone 1 அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபோன் ஒன்றுக்கொன்று மாற்றக்கூடிய பின் கவருடன் வருகிறது. பல அக்சஸரிஸ் இதில் சேர்க்கப்படலாம், இதில் ஸ்மார்ட்போன் இன்று அதாவது ஜூலை 12 அன்று முதல் முறையாக Flipkart மூலம் விற்பனைக்கு வருகிறது இதனுடன் இதில் பல எக்ஸசிரிஸ் சேர்க்கப்பட்டுள்ளது.

CMF Phone 1 விலை மற்றும் ஆபர்

இந்த போன் பிராண்ட் கண்பிக்ரேசனில் அறிமுகம் செய்யப்பட்டது இதில் 6GB RAM + 128GB ரேம் ஸ்டோரேஜ் விலை 15,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது
அதேசமயம் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.17,999. ப்ளாக் ப்ளூ ,லைட் க்ரீன் மற்றும் ஆரஞ்சு கலர்களில் இந்த போனை வாங்கலாம்

இதன் விற்பனை பிளிப்கார்ட்டில் மதியம் 12 மணிக்கு தொடங்கும். நீங்கள் CMF இந்தியா வெப்சைட்டிலும் இருந்தும் வாங்கலாம். அறிமுக சலுகையின் கீழ், இந்த போனை ரூ.1000 டிஸ்கவுன்ட் விலையில் வாங்கலாம். மேலும் இதில் HDFC கார்டில் ஆபர் வழங்கப்படுகிறது

CMF Phone 1 launched

CMF Phone 1 சிறப்பம்சம்

இந்த போனின் அம்சங்களை பற்றி பேசினால், CMF ஃபோன் 1 ஆனது 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது FHD+ தெளிவுத்திறன் மற்றும் 2000 nits உச்ச பிரகாசத்தை வழங்குகிறது. இது தவிர, இந்த டிஸ்ப்ளே HDR10+ மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட்டை சப்போர்ட் செய்கிறது .

ந்த போனின் பர்போமான்ஸ் பற்றி பேசினால்,இந்த போனில் MediaTek Dimensity 7300 ப்ரோசெசருடன் பொருத்தப்பட்டுள்ளது, இது 8GB வரை ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனுடன், ரேமை கிட்டத்தட்ட 8 ஜிபி வரை அதிகரிக்கும் விருப்பத்தையும் நீங்கள் பெறுவீர்கள். மைக்ரோ SD கார்டு மூலமாகவும் ஸ்டோரேஜ் அதிகரிக்கலாம்.

போட்டோ எடுப்பதற்கு இந்த போனில் 50MP ப்ரைம் கேமராவுடன் 2MP டெப்த் சென்சார் கிடைக்கும். செல்ஃபி மற்றும் வீடியோ காலிர்க்காக முன்பக்கத்தில் 16MP ஷூட்டர் உள்ளது.

இதற்குப் பிறகு, பேட்டரி மற்றும் சார்ஜிங் துறையைப் பற்றி பேசினால், 5000mAh பேட்டரி CMF ஃபோன் 1 ஐ இயக்குகிறது மற்றும் இது 33-வாட் பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பொறுத்தவரை, இந்த போனனது சமீபத்திய ஆண்ட்ராய்டு 14ஐ அடிப்படையாகக் கொண்ட நத்திங் ஓஎஸ் 2.5 இயல் இயங்குகிறது.

இதையும் படிங்க: Samsung யின் புதிய போன் அறிமுக செய்த கையோடு Galaxy Z Flip 5 யில் சூப்பர் டிஸ்கவுன்ட்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :