இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான செல்கான் மொபைல்ஸ் இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. செல்கான் யூனிக் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்ய செல்கான் திட்டமிட்டு இருக்கிறது.
2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, குவாட்கோர் பிராசஸர், 16 எம்.பி. பிரைமரி கேமரா கொண்டிருக்கும் செல்கான் யூனிக் ஸ்மார்ட்போனில் 3 ஜிபி ரேம் மற்றும் இன்டெர்னல் மெமரியை 128ஜிபி வரை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
செல்கான் யூனிக் சிறப்பம்சங்கள்:
– 5.0 இன்ச் 720×1280 பிக்சல் IPS, 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் சிப்செட்
– 3 ஜிபி ரேம்
– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– 8 எம்பி செல்ஃபி கேமரா, மூன்லைட் ஃபிளாஷ்
– ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
– 2700 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 4ஜி, வைபை, ப்ளூடூத்
செல்கான் யூனிக் ஸ்மார்ட்போன் மெட்டல் சேசிஸ் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் ஹோம் பட்டனில் கைரேகை சென்சார் இடம்பெற்றிருக்கிறது. இந்தியாவில் செல்கான் யூனிக் ஸ்மார்ட்போன் விலை ரூ.8,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு செல்கான் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இணைந்து ஸ்டார் 4ஜி பிளஸ் எனும் ஸ்மார்ட்போனினை ரூ.1,249 விலையில் இந்தியாவில் வெளியிட்டது. 4.0 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, டூயல் சிம் ஸ்லாட், பிரைமரி, செல்ஃபி கேமரா உள்ளிட்ட அம்சங்களுடன் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் செயலிகளையும் சப்போர்ட் செய்கிறது