BlackBerry யின் முதல் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் BlackBerry KEY2 42,990ரூபாயில் இந்தியாவில் அறிமுகமானது..!

BlackBerry யின் முதல் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் BlackBerry KEY2 42,990ரூபாயில்  இந்தியாவில் அறிமுகமானது..!
HIGHLIGHTS

இந்த சாதனம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது மற்றும் இது ஜூலை 31 அன்று அமேசானில் விற்பனைக்கு வரும்

ப்ளாக்பெரி முதல் டூயல் ஸ்மார்ட்போன் BlackBerry KEY2 இந்தியாவில் Rs 42,990ரூபாய்க்கு அறிமுகமானது, இந்தியாவில் BlackBerry  ப்ளாக்பெரி  லைசன்ஸ் Optiemus Infracom நேற்று இந்தியாவில் BlackBerry KEY2  ஸ்மார்ட்போனை  அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போனை கடந்த மாதம் நியூயார்க் நகரில் நடந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தியது மற்றும் இந்த சாதனம் BlackBerry KEYone  இடத்தை  பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது 

இது கீ போர்டு உடன் இருக்கும் பெஸ்ட் போனாகவும்இந்த ஸ்மார்ட்போனில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 660 Kryo ஒக்டா  கோர் ப்ரோசெசர் உடன் அறிமுகப்படுத்த பட்டது மற்றும் இதனுடன் இதில் 6GB  ரேம் மற்றும் 64GB  இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதை தவிர இந்த ஸ்தானத்தின் ஸ்டோரேஜை 256GB  வரை அதிகரிக்க முடியும் 

ஆப்டமஸ் இன்ஃப்ராகாம் லிமிட்டெட் இந்தியாவில் பிளாக்பெரி கீ2 ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போனில் 4.5 இன்ச் 1620×1080 பிக்சல் டிஸ்ப்ளே, 3:2 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் 4-அடுக்கு க்வெர்டி பேக்லிட் கீபோர்டு வழங்கப்பட்டுள்ளது.

இந்த கீபோர்டு டச் ஜெஸ்ட்யூர், ஃப்ளிக் டைப்பிங், 52 வகையில் கஸ்டமைஸ் செய்யக்கூடிய ஷார்ட்கட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஸ்பேஸ் பார் பட்டனில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பட்டன்கள் முந்தைய ஸ்மார்ட்போன்களை விட 20% பெரிதாகவும், மேட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது. 

இத்துடன் பிளாக்பெரி கீ2 ஸ்மார்ட்போனில் ஸ்பீட் கீ வழங்கப்பட்டுள்ளது. இதை அழுத்தினால், பயனர்கள் ஏற்கனவே செட் செய்திருக்கும் செயலிகளை பயன்படுத்த முடியும். கீ2 ஸ்மார்ட்போனில் ஸ்ன்ப்டிராகன் 660 சிப்செட், 6 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 12 எம்பி டூயல் பிரைமரி கேமராக்கள், 1.28 மைக்ரோமீட்டர் பிரைமரி கேமரா, டூயல் PDAF மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 7 சீரிஸ் அலுமினியம் ஃபிரேம், டையமன்ட் பேட்டன் செய்யப்பட்ட பின்புறம், சாஃப்ட் டச் மற்றும் 3360 Mah .பேட்டரி மூலம் பவர் கொடுக்கப்பட்டுள்ளது . இத்துடன் குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

பிளாக்பெரி கீ2 சிறப்பம்சங்கள்:

– 4.5 இன்ச் 1620×1080 பிக்சல் 3:2 டிஸ்ப்ளே 433 PPI
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். சிப்செட்
– அட்ரினோ 512 GPU
– 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 4-அடுக்கு க்வெர்ட்டி பேக்லிட் கீபோர்டு, கேபாசிட்டிவ் டச்
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளஷ், F/1.8 அப்ரேச்சர், 1.14µm பிக்சல், டூயஸ் PDAF
– 12 எமபி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.6, 1.0µm பிக்சல்
– 8 எம்பி செல்ஃபி கேமரா
– ஸ்பேஸ் பார் பட்டனில் கைரேகை சென்சார், ஸ்பீட் கீ
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3360 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவால்காம் க்விக் சார்ஜ் 3.0

பிளாக்பெரி கீ2 ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் பிளாக்பெரி கீ2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.42,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 31-ம் தேதி முதல் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கும் பிளாக்பெரி கீ2 ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ.4,450 வரையிலான கேஷ்பேக், தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது கூடுதலாக 5% கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo