digit zero1 awards

இந்தியாவில் இரண்டு புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போன்கள் இன்று அறிமுகமானது…!

இந்தியாவில் இரண்டு புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போன்கள்  இன்று அறிமுகமானது…!
HIGHLIGHTS

பிளாக்பெரி எவால்வ் மற்றும் எவால்வ் X ஸ்மார்ட்போனின் விலை ரூ.24,990 மற்றும் ரூ.34,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இன்று டெல்லியில் ப்ளாக்பெரி  Evolve மற்றும் evolve X  ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது, இந்த ஸ்மார்ட்போன்  பற்றி நாம்  லைவ் நிகழ்வை  எங்களது பேஸ்புக்கில் இணைத்துள்ளோம்  இதனுடன் 
 இந்த பிளாக்பெரி எவால்வ் மற்றும் எவால்வ் X என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன்களில் 5.99 இன்ச் ஃபுல் HD  பிளஸ் 18:9 ரக, 2.5D டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ பிளாட்பாரம் DTEK ஆப் மூலம் பாதுகாக்கப்படுகிறது. 

https://static.digit.in/default/feb4146e57d19b9cf2f3b1b87fcb11eba3228065.jpeg

அழகிய செல்ஃபிக்களை எடுக்க 16 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. எவால்வ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட், 4 ஜிபி ரேம், டூயல் 13 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. எவால்வ் X ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட், 6 ஜிபி ரேம், 12 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி செகண்டரி  கேமரா வழங்கப்பட்டுள்ளது.

https://static.digit.in/default/0ad283dda49c4424bcf0b89e43a74ddb5616d00e.jpeg

4000 Mah பேட்டரி மூலம் பவர் கொடுக்கப்பட்டுள்ளது இந்நிலையில், எவால்வ் X ஸ்மார்ட்போனில் குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 வசதி மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

பிளாக்பெரி எவால்வ் மற்றும் எவால்வ் X சிறப்பம்சங்கள்:

– 5.99 இன்ச் 2160×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– எவால்வ் – 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm சிப்செட்
– அட்ரினோ 506 GPU
– எவால்வ் X – ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்
– அட்ரினோ 512 GPU
– எவால்வ் – 4 ஜிபி ரேம்
– எவால்வ் X – 6 ஜிபி ரேம்
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– எவால்வ் – 13 எம்பி + 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ்,சாம்சங் S5K3L8 சென்சார்
– எவால்வ் X – 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ், f/1.8, சாம்சங் S5K2L8 சென்சார்
– 13 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K3M3 சென்சார், f/2.6
– 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 4000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், க்விக் சார்ஜ் 3.0, வயர்லெஸ் சார்ஜிங் 

பிளாக்பெரி எவால்வ் மற்றும் எவால்வ் X ஸ்மார்ட்போனின் விலை ரூ.24,990 மற்றும் ரூ.34,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை அமேசான் வலைதளத்தில் பிரத்யேகமாக நடைபெற இருக்கிறது. பிளாக்பெரி எவால்வ் X ஆகஸ்டு மாத இறுதியிலும், எவால்வ் செப்டம்பர் மாதத்திலும் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அறிமுக சலுகை :-
புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு அறிமுக சலுகையாக ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ.3,950 கேஷ்பேக் மற்றும் ICICI பேங்கின் க்ரெடிட்   கிரெடிட் கார்டுகளை கொண்டு வாங்கினால் 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. மற்றும் இந்த ஸ்மார்ட்போன்  அமசனில் எக்ஸ்க்ளூசிவ் ஆபரின்  கீழ்  மிடில் செப்டம்பர்  கிடைக்க ஆரம்பிக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo