பிளாக்பெரி நிறுவனத்தின் அத்னா ஸ்மார்ட்போனின் விவரங்கள் கீக்பென்ச் வலைத்தளத்தில் சில மாதங்களுக்கு முன் கசிந்திருந்தது. அந்த வகையில் அத்னா ஸ்மார்ட்போனின் முதல் தோற்றம் வெளியாகி இருக்கிறது. பிளாக்பெரி அத்னா ஸ்மார்ட்போன் இந்த ஆண்டிற்குள் வெளியிடப்பட இருக்கிறது.
முதல் தோற்றத்தில் ஸ்மார்ட்போனின் தோற்றம் தெளிவாக காட்சியளிக்கிறது. புதிய அத்னா ஸ்மார்ட்போன் பிளாக்பெரி கீஒன் போன்று வழக்கமான க்வெர்டி கீபேட் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இத்துடன் டூயல் பிரைமரி கேமரா, செவ்வக ஸ்லாப் டிசைன் கொண்டிருக்கிறது.
ஸ்மார்ட்போனின் கீழ்புறம் க்வெர்டி கீபேட் இடம்பெற்றிருக்கிறது. இத்துடன் கீஒன் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டதை போன்ற தொடுதிரை வசதி கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போனின் பிரைமரி கேமரா வடிவைப்பு வழக்கமான ரக்டு அமைப்பு கொண்டிருக்கிறது. இதன் டூயல் கேமரா அமைப்பு கிடைமட்டமாக பொருத்தப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட், 8 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதுதவிர 6 ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. பிளாக்பெரி அத்னா மட்டுமின்றி லூனா மற்றும் யுனி என்ற ஸ்மார்ட்போன்களையும் பிளாக்பெரி உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் குறித்து இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை.