digit zero1 awards

புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான சென்போன் மேக்ஸ் ப்ரோ M1 அறிமுகம்…!

புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான சென்போன் மேக்ஸ் ப்ரோ M1 அறிமுகம்…!
HIGHLIGHTS

அசுஸ் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 இந்திய விற்பனை ஜூலை 26-ம் தேதி நடைபெற இருப்பதாக ப்ளிப்கார்ட் அறிவித்துள்ளது.

அசுஸ் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 இந்திய விற்பனை ஜூலை 26-ம் தேதி நடைபெற இருப்பதாக ப்ளிப்கார்ட் அறிவித்துள்ளது. அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. 

ஸ்டாக் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட், மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு, கைரேகை சென்சார் மற்றும் 5000 Mah பேட்டரி மூலம் பவர் கொடுக்கப்பட்டுள்ளது..

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 சிறப்பம்சங்கள்:

– 5.99 இன்ச் 2160×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி + 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிபர்செட்
– அட்ரினோ 509 GPU
– 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2, PDAF, 1.12μm பிக்சல்
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
– 16 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ், f/2.2
– கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 5000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 16 எம்பி பிரைமரி, 16 எம்பி செல்ஃபி கேமரா வெர்ஷன் விலை ரூ.14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை பயனர்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக வாங்க முடியும்.

இந்தியாவில் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 டீப்சீ பிளாக் மற்றும் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம் மாடல் விலை ரூ.10,999, 4 ஜிபி ரேம் மாடல் ரூ.12,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo