சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அசுஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனும் அறிமுகமாக இருக்கும் நிலையில், இந்த ஸ்மார்ட்போன் நான்கு கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது, பிரபல டிப்ஸ்டரான எவான் பிளாஸ் ZenFone 5 Lite வெளியிட திட்டமிட்டிருக்கும் ஸ்மார்ட்போன் குறித்த தகவல்களை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இத்துடன் அசுஸ் வெளியிட இருக்கும் ஸ்மார்ட்போனின் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டிருக்கிறார்.
எவான் பிளாஸ் வெளியிட்டிருக்கும் அசுஸ் ஸ்மாப்ட்போனில் பின்புறம் மற்றும் முன்பக்கம் டூயல் கேமரா செட்டப் என மொத்தம் நான்கு கேமராக்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Azuz ZenFone 5 Lite என அழைக்கப்படும் என்றும் அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
புதிய ஸ்மார்ட்போனின் தோற்றம் பார்க்க ZenFone 4 சீரிஸ் போன்றே காட்சியளிக்கிறது. முன்பக்கம் மற்றும் பின்புறம் டூயல் கேமரா செட்டப், 18:9 ரக டிஸ்ப்ளே, பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. போட்டோக்கள் எடுக்க 20 எம்பி டூயல் செல்பி கேமரா, பின்புறம் 16 எம்பி டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Asus ZenFone 5 Lite ஸ்மார்ட்போனில் புல் HD பிளஸ் 1080×2160 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஸ்கிரீன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் சென்ஃபோன் 5 லைட் தவிர புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அசுஸ் வெளியிடுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
Asus வெளியிட இருக்கும் நான்கு கேமரா கொண்ட ZenFone 5 லைட் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்கும் என கூறப்படுகிறது.