Apple பயனர்களுக்கு எச்சரிக்கை Spyware தாக்குதல் மொத்த பணமும் அபேஸ் ஆகலாம்

Apple பயனர்களுக்கு எச்சரிக்கை Spyware தாக்குதல் மொத்த பணமும் அபேஸ் ஆகலாம்
HIGHLIGHTS

Apple இந்தியாவில் உள்ள சில பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது

டிவைஸ்களில் Pegasus போன்ற Spyware தாக்குதலின்" சாத்தியமான இலக்காக மாறக்கூடும்

இதன் தொடர்பாக Apple iphone பயனர்களுக்கு ஏப்ரல் 11 ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு ஈமெயில் அனுப்பியது

Apple இந்தியாவில் உள்ள சில பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது, அவர்களின் டிவைஸ்களில் Pegasus போன்ற Spyware தாக்குதலின்” சாத்தியமான இலக்காக மாறக்கூடும். இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள 98 நாடுகளில் உள்ள பயனர்களுக்கு அனுப்பப்பட்ட மற்றொரு அறிவிப்பில், இந்த ஸ்பைவேர் பயனர்களின் டிவைஸ்களில் கட்டுப்பாட்டைப் பெற முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 2021 முதல், ஆப்பிள் இந்த நோட்டிபிகேசன் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பயனர்களுக்கு அனுப்பியுள்ளது.

இதன் தொடர்பாக Apple iphone பயனர்களுக்கு ஏப்ரல் 11 ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு ஈமெயில் அனுப்பியது இதன் மூலம் பயனர்களை ஸ்பைவேர் தாக்குதல் குறித்து எச்சரித்துள்ளது இந்த தாக்குதல்கள் ஐபோன்களின் பாதுகாப்பை சமரசம் செய்யலாம். அந்த ஈமெயில் தலைப்பு ALERT என வந்துள்ளது அதில் உங்கள் ஐபோன் மீது இலக்கு வைக்கப்பட்ட கூலிப்படை ஸ்பைவேர் தாக்குதலை ஆப்பிள் கண்டறிந்துள்ளது,’ பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறது.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் மகளும், ஊடக ஆலோசகருமான இல்திஜா முப்தி மற்றும் சம்ரித் பாரத் அறக்கட்டளையின் நிறுவனர் புஷ்பராஜ் தேஷ்பாண்டே ஆகியோர் மைக்ரோ பிளாக்கிங் தளம் X இல், தங்கள் போன் ஹேக் செய்யப்படலாம் என்ற அறிவிப்பை ஆப்பிள் தங்களுக்கு அனுப்பியுள்ளது என்று கூறினார்.

இந்த எச்சரிக்கையின் முக்கிய காரணம் பாதுகப்பில்லாத வெப்சைட், மேல்சியஸ் App, மூலம் இந்த spyware தாக்குதல் நம்ம ஸ்மார்ட்போனில் எளிதாக வந்துவிடுகிறது இதன் மூலம் நமது முக்கிய டேட்டாக்களை திருடிவிடுகிறது அதில் பேங்க் தகவல் பாஸ்வர்ட் மற்றும் லோகின் உட்பட திருடப்படுகிறது மேலும் இதை மூன்றாம் தரப்பினருடம் இதை விற்றுவிடுகிரரகள்.

இந்த ஆண்டு ஏப்ரலில், இந்திய கணினி எமர்ஜென்சி ரெஸ்போன்ஸ் குழு (Cert-In) ஐபோன் மற்றும் iPad க்கான ஆப்பிள் பிளாட்பார்மில் பல பாதிப்புகளைக் கண்டறிந்தது. IOS க்கான பதிப்பு 17.4.1 க்கு முந்தைய Safari வெர்சன் உலாவியின் பதிப்புகளில் உள்ள குறைபாடுகள் இலக்கு சாதனங்களில் “தன்னிச்சையான கோட் உட்செலுத்த” தாக்குபவர்களை அனுமதித்திருக்கலாம் என்று அரசாங்க சைபர் பாதுகாப்பு நிறுவனம் கூறியது.

இந்த spyware தாக்குதலில் இருந்து iPhone எப்படி பாதுகாப்பாக வைப்பது?

இத்தகைய அச்சுறுத்தல்களைச் சமாளிக்க, ஆப்பிள் அதன் ஐபோன் பயனர்களுக்கு தனித்துவமான “லாக் டவுன் பயன்முறையை” இயக்க அறிவுறுத்துகிறது. அது என்ன செய்யும்? இது பெகாசஸ் போன்ற சிக்கலான ஸ்பைவேர்களில் இருந்து ஐபோன்களை பாதுகாக்கிறது. இது தாக்குதலின் அபாயத்தைக் குறைக்க சில பயன்பாடுகள், இணையதளங்கள் மற்றும் அம்சங்களைக் கட்டுப்படுத்துகிறது. இது தவிர, ஆப்பிள் பயனர்கள் தங்கள் சாப்ட்வேர் அப்டேட் வலுவான பாஸ்வர்டை பயன்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.

நீங்கள் ஐபோன் பயன்படுத்துபவராக இருந்தால், மிகவும் கவனமாக இருங்கள் மற்றும் உங்கள் மதிப்புமிக்க தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்க இந்தப் படிகளைப் பின்பற்றவும்.

இதையும் படிங்க: iPhone பயனர்கள் எச்சரிக்கை: india Post scam நூதன திருட்டு

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo